Numerology: உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

Published : Jun 29, 2026, 12:47 PM IST

Numerology Calculator: எண் கணிதத்தின்படி சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பதே இருக்காது. அவர்கள் இந்த ஜென்மத்துடன் முக்தியை அடைந்து விடுவார்களாம். அந்த எண்கள் குறித்து இங்கு காணலாம். 

PREV
17
Numerology Calculator

எண் கணிதம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் படி மறுபிறவி இல்லாத நிலை அல்லது முக்தி என்பது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி, கர்ம வினைகள் மற்றும் ஆன்மீகப் பயணம் சார்ந்தது ஆகும். எண் கணித சாஸ்திரத்தில் குறிப்பிட்ட எண்களுக்கு கர்ம வினைகளை முடிவுக்கு கொண்டு வருதல், முக்தி அடைவதற்கான ஆற்றல் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மறுபிறவிக்கான சாத்தியக்கூறுகள் குறைவு அல்லது இதுவே கடைசி பிறவியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதைப் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:  தசாங்க யோகத்துடன் தொடங்கும் ஜூலை மாதம்.! 5 ராசிகளுக்கு இனிமே ஏறுமுகம் தான்.! ராஜவாழ்க்கை வாழப்போறீங்க.!

27
கேதுவின் ஆதிக்கம் கொண்ட 7-ம் எண் (தேதிகள்: 7, 16, 25)

எண் கணிதத்தில் 7 என்பது ஞானம் மற்றும் ஆன்மீகத்தின் உச்சத்தை குறிக்கும் எண்ணாகும். இந்த எண்ணின் அதிபதி ஞானகாரகனான கேது பகவான் ஆவார். கேது பகவான் முத்திக்கு அதிபதியாக கருதப்படுகிறார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே உலகியல் இன்பங்களை விடுத்து, ஆன்மீகத் தேடலில் அதிகம் ஈடுபடுவார்கள். இவர்கள் கடந்த கால கர்ம வினைகளை இந்த பிறவிலேயே அனுபவித்து முடித்து விடவேண்டும் என்ற நோக்கத்தோடு பிறந்திருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் போராட்டங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் அது ஆன்மாவை தூய்மைப்படுத்துவதற்காகவே நடக்கிறது. உண்மையான ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுத்து இவர்கள் வாழ்க்கை வாழ்வதால், இதுவே இவர்களின் கடைசி பிறவியாக அமைந்து விடுகிறது.

இதையும் படியுங்கள்:  கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன்.! 4 ராசிகளுக்கு பொற்காலம்.! பணம், சொத்து, வேலையில் உச்சம்.!

37
செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட 9-ம் எண் (தேதிகள்: 9, 18, 27)

எண் கணிதத்தில் ஒற்றைப்படை எண்களின் இறுதி எண்ணாக ஒன்பது விளங்கி வருகிறது. இது ஒரு சுழற்சியின் முடிவைக் குறிக்கிறது. எண் 9 செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட எண் ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தர்ம சிந்தனை, பொதுநலம் மற்றும் தியாக குணம் மிக்கவர்களாக இருப்பார்கள். இந்த எண் அனைத்தின் முடிவையும் குறிப்பதால் இந்த எண்ணில் பிறந்தவர்களின் ஆன்மா பல பிறவிகளைக் கடந்து முதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த பிறவியை எடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் சுயநலமின்றி பிறருக்கு உதவும் பொதுநல மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த பிறவிலேயே கர்ம வினைகள் முடிவுக்கு வந்து, மறுபிறவியற்ற நிலையை அதாவது மோட்சத்தை அடைகிறார்கள்.

இதையும் படியுங்கள்:  குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!

47
கூட்டு எண் 7 அல்லது 9 வருபவர்கள்

ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் 7 அல்லது 9 ஆக இருந்தாலும் அவர்களுக்கும் மறுபிறவி இல்லாத நிலை அல்லது ஆன்மீக உச்சம் சாத்தியமாகும். உதாரணமாக ஒருவர் 12-05-1990 இல் பிறந்தார் என வைத்துக் கொள்வோம்.

  • இதில் உள்ள தேதி மாதம் வருடம் ஆகிய அனைத்தையும் கூட்ட வேண்டும்.
  • 1 + 2 + 0 + 5 + 1 + 9 + 9 + 0 = 27
  • 2 + 7 = 9

இவர்களது கூட்டு எண் 9 ஆகும். இவர்களும் ஆன்ம விடுதலைக்கான தகுதியைப் பெறுகிறார்கள். இந்த கணக்கீட்டின்படி யாருக்கு 7 அல்லது 9 ஆகிய எண்கள் வருகிறதோ அவர்களும் மறுபிறவி இல்லாத நிலையைப் பெறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:  அக்டோபர் 31 வரை 6 ராசிகளுக்கு ஜாக்பாட்! குரு, சுக்கிரன், புதன் தரும் ராஜயோகம்.!

57
மாஸ்டர் எண்கள் (Master Numbers: 11, 22)

எண் கணிதத்தின்படி சில சிறப்பு விதிகளும் உண்டு. 11 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது இந்த எண்களை கூட்டு எண்களாகக் கொண்டவர்கள் முதிர்ந்த ஆன்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பூமிக்கு தங்களுடைய கர்ம விளைவுகளுக்காக வருவதில்லை. மாறாக உலகிற்கு வழிகாட்டவும், ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவதரிப்பவர்கள். இவர்கள் கடமை முடிந்ததும் இவர்களது ஆன்மா பிரபஞ்சத்துடன் கலந்து விடுவதாக நம்பப்படுகிறது.

  • தேதி 11-ல் பிறந்தவர்கள் ஆன்மீக விழிப்புணர்வின் உச்சமாக இருப்பார்கள். இவர்கள் ஆன்மீக ஒளியைப் பரப்பவும், உலகிற்கு வழிகாட்டவும் பிறவி எடுத்திருப்பார்கள்.
  • தேதி 22-ல் பிறந்தவர்கள் மகாசக்தி படைத்த கட்டமைப்பாளர்கள். உலக நன்மைக்காக பெரிய காரியங்களை செய்து, தனது ஆன்மீக கடமையை முடித்துக் கொள்ளும் நிலையில் இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:  Numerology Calculator: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

67
மறுபிறவி அற்ற நிலையை அடைய எண் கணிதம் கூறும் ரகசியம்

மறுபிறவி அற்ற நிலையை அடைய எண் கணிதம் சில ரகசியங்களைக் கூறுகிறது. பிரதிபலன் பாராமல் கடமைகளைச் செய்ய வேண்டும். இந்த பிறவியில் தமக்கு ஏற்படும் இன்ப, துன்பங்களை இறை வழியாக ஏற்றுக் கொண்டு பாவ வினைகளை சேர்க்காமல் வாழ வேண்டும். குடும்பம், பணம், பதவி ஆகியவற்றின் மீது கடமைக்காக அன்பு செலுத்தினாலும் மனதளவில் பற்றற்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற விதிகளை பின்பற்றினால் மட்டுமே இந்த பிறவியை இறுதிப்பிறவியாக மாறும் என்று எண் கணிதம் அறிவுறுத்துகிறது.

இதையும் படியுங்கள்:  Numerology: பிறந்த தேதியின்படி நீங்கள் எந்த விலங்கின் குணத்தைக் கொண்டவர்? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது தெரியுமா?

77
முக்கியக் குறிப்பு:

எண் கணிதமானது ஒருவருடைய ஆன்மாவின் தன்மையையும், இந்தப் பிறவியின் நோக்கத்தையும் காட்டும் ஒரு வழிகாட்டியே தவிர, இறுதி தீர்ப்பு அல்ல. எந்த தேதியில் பிறந்திருந்தாலும் தூய்மையான பக்தி, தியானம் மற்றும் நற்செயல்களின் மூலம் எவரும் பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்க முடியும் என்பதே ஆன்மீகத்தின் உண்மையான தத்துவமாகும். எந்த தேதியில் பிறந்திருந்தாலும் அவர்கள் செய்யும் புண்ணியங்கள், பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பு, பற்றற்ற பக்தி ஆகியவையே ஒருவரை மறுபிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories