
Mithunam New Year 2025 Rasi Palan Tamil : ஒன்றரை மாதங்களில் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025 ஆம் ஆண்டு பிறக்க போகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் அல்லவா. அப்படிப்பட்ட நன்னாளில் 2025 ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு மிதுன ராசியினருக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்க போகிறது என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம். குரு, சனி, ராகு மற்றும் கேது பெயர்ச்சி இந்த புத்தாண்டில் நிகழ இருக்கிறது. இந்த பெயர்ச்சிகளின் அடிப்படையில் மிதுன ராசியினருக்கு பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் பொதுவான பலன்களே. அவரவர் செய்த கர்மாவிற்கு ஏற்பவும், தசா புத்திகளின் அடிப்படையிலும் இந்த புத்தாண்டு பலன் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி:
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் கல்வியில் மிதுன ராசியினருக்கு பெரியளவில் முன்னேற்றம் இருக்காது. குரு பகவான் ஆண்டின் தொடக்கம் முதல் மே மாதத்தின் பாதி வரையில் உங்களது 12ஆவது வீட்டில் இருக்கிறார். இது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்களது முதல் வீட்டிற்குள் நுழையும். இது சாதகமாக இல்லை என்றாலும் கூட பெரியவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அறிவுக்காரகனான குரு பகவான் உங்களது அறிவுத் திறனையும், கற்றல் திறனையும் மேம்படுத்திக் கொடுக்கும். இந்த ஆண்டில் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம்:
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலனை கிடைக்கப் பெறுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். உணவு விஷயங்களில் மட்டும் கவனமாக இருங்கள். சில நேரங்களில் மார்பு பகுதிகளில் பிரச்சனைகள் வரலாம். பெரியளவில் பாதிப்பு வருவதற்கு முன் மருத்துவரிடம் சென்று ஆலோனை எடுத்துக் கொள்வது அவசியம்.
பொருளாதாரம்:
2025 புத்தாண்டைப் பொறுத்த வரையில் மிதுன ராசியினருக்கு நிதி சிக்கல் என்று எதுவும் இருக்காது. உங்களது கடின முயற்சியின் மூலமாக நிதி சிக்கலிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் ஆண்டின் தொடக்கம் முதல் 5 மாதங்கள் வரையில் செலவு கூடுதலாக இருக்கும். அதன் பிறகு வரும் மாதங்களில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!
தொழில், வியாபாரம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆண்டு புத்தாண்டைப் பொறுத்த வரையில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் பிஸினஸ் செய்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும். எதிலும் திட்டமிட்டு செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். 2025 ஆம் ஆண்டு கடினமாக உழைக்க வேண்டி வரும். முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும் என்பதை இந்த ஆண்டு சுட்டிக் காட்டுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரத்தில் சிறப்பான பலனை கொடுக்கும்.
வேலை:
2025 ஆம் ஆண்டை பொறுத்த வரையில் வேலையில் குரு சாதகமான பலனை கொடுப்பார். ஆனால், வேலையில் திருப்தி இருக்காது. வேலையில் மாற்றம் ஏற்படும். இடம் விட்டு இடம் மாறும் சூழல் ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பிரச்சனை வரக் கூடும். கவனமாக இருப்பது நல்லது.
2025ல் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்கு கர்ம சனி ஏற்படும்? ஜாலியா இருக்கலாமா? சனி ஆப்பு வைக்குமா?
காதல் வாழ்க்கை:
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் காதல் உறவுகளில் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். சுக்கிர பகவானும் சாதகமான நிலையில் இருப்பதால் காதல் உறவு சிறப்பாக இருக்கும். குரு பகவானும் காதல் வாழ்க்கையில் சிறப்பான பலனை கொடுப்பார். ஆனால் மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் சாதகமற்ற நிலைக்கு செல்வதால் காதல் உறவுகள் சிறப்பானதாக இருக்காது. ஆனால் திருமண உறவுக்காக காதலிப்பவர்களுக்கு அவர்களது விருப்பம் நிறைவேறும்.
திருமண வாழ்க்கை:
மிதுன ராசியினருக்கு திருமண வாய்ப்பு கூடி வரும். திறமையான, அழகான வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறுவார்கள். குருவின் சாதகமற்ற பலன் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். சிறுசிறு விஷங்களில் குழப்பம் உண்டாகக் கூடும். 2025 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு குரு 7ஆவது வீட்டிற்கு பெய்ர்ச்சி ஆவதால், எல்லா வரும் போகும். பிரச்சனைகளை தீர்ப்பதில் உங்களது முழு கவனம் இருக்க வேண்டும்.
குடும்ப வாழ்க்கை:
2025 ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு சிறப்பாக இருக்கும். முதல் பாதி சாதகமற்றதாகவும், 2ஆம் பகுதி சாதகமானதாகவும் இருக்கும். இதனால் குடும்ப பிரச்சனைகள் இருக்கும். பழைய பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். எனினும் 2024 ஆம் ஆண்டை விட 2025 சிறப்பானதாக இருக்கும்.
2025 புத்தாண்டு கடக ராசி பலன் – உங்களுக்கான ஆண்டா? ராஜயோகம் அமையுமா? ஜாப், பிஸினஸ் எப்படி?
நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம்:
நிலம், வீடு வாங்குவதை இந்த ஆண்டு தவிர்க்க வேண்டும். உங்களை சுற்றிலும் சூழ்ச்சி நடக்க வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். நிலம் மற்றும் வீடு வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆனால், வண்டி, வாகனங்களைப் பொறுத்த வரையில் 2025 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கும். பழைய வாகனம் வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆவணங்கள் முதலியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரங்கள்:
நாள்தோறும் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று வாருங்கள்.
வெள்ளி அணிந்து கொள்ளுங்கள்.
ஆன்மீக குருக்கள், முனிவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய நல்லது நடக்கும்.
சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
2025 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில் மிதுன ராசியினருக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும். அதிர்ஷ்டமான் ஆண்டு. உங்களது திறமை வெளிப்படும். மதிப்பு, மரியாதை உயரும், அந்தஸ்து உயரும்.