கார்த்திகையில் ஜாக்பாட் அடிக்கும் டாப் 6 ராசிகள்: இதுல உங்க ராசி இருக்காணு பாருங்க?

First Published | Nov 12, 2024, 7:01 PM IST

Top 6 Lucky Zodiac Signs in Karthigai Rasi Palan Tamil : கார்த்திகை மாதத்தில் இந்த ராசியினருக்கு எல்லாமே நல்லதாகவே நடக்க போகுது. அதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Karthigai Rasi Palan Tamil, Astrology, Top 6 Lucky Zodiac Signs in Karthigai Rasi Palan Tamil

Karthigai Rasi Palan Tamil : ஐயப்பனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் கார்த்திகை மாதத்தில் சுப காரியங்கள் செய்யப்படும். திருமணம், வீட்டு கிரகபிரவேசம், புதிய முயற்சிகள் எல்லாம் செய்வார்கள். இந்த மாதங்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அப்படிப்பட்ட கார்த்திகை மாதங்களில் எந்தெந்த ராசியினருக்கு நல்லது நடக்க போகிறது என்பது குறித்து பார்க்கலாம். கார்த்திகை மாதத்தை பொறுத்த வரையில் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் சிறப்பான பலனை அடைவார்கள்.

Karthigai Rasi Palan Tamil, Zodiac Sign

கும்பம்:

திருமண யோகம் கை கூடி வரும். காதலில் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்குவீர்கள். வண்டி, வாகன யோகமும் உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Tap to resize

Guru - Sukran Serkai Palan Tamil, Astrology, Horoscope

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு இந்த கார்த்திகை மாதத்தை பொறுத்த வரையில் சுக்கிரன் மற்றும் குருவின் சஞ்சார பலனால் திருமணம் நடைபெறும். பெரிய இடத்து சம்பந்தம் தேடி வரும். அதாவது, மகன் அல்லது மகளுக்கு பணக்கார குடும்பத்தில் திருமணம் நடைபெறும். காதலில் விழும் சூழல் நிலவும். அதுவும் பெரிய இடமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

Sukran Transit Palan Tamil

கன்னி:

குரு மற்றும் சுக்கிரன் சஞ்சாரத்தால் திருமண வாய்ப்பு தேடி வரும். பணக்கார குடும்பத்துடன் திருமணம் நடைபெற வாய்ப்புகள் இருக்கிறது. வண்டி வாகனம் வாங்குவீர்கள். சொத்து, சுகம் சேரும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Guru Transit Palan Tamil

மிதுனம்:

சுக்கிரன் மற்றும் குருவின் அருளால் திருமண யோகம் தேடி வரும். காதலில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

Karthigai Rasi Palan, Astrology Prediction

ரிஷபம்:

மாங்கல்ய ஸ்தானத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருப்பதால் திருமண யோகம் தேடி வரும். 8ஆவது இடத்தில் சுக்கிரன் இருப்பதால் திடீர் பண வரவு உண்டாகும். சொத்து சுகம் தேடி வரும். சொந்த வீடு வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும்.

Horoscope, Astrology, Karthigai Rasi Palan Tamil

மேஷம்:

சுக்கிரன் பாக்ய ஸ்தானத்திலும், குரு குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்வதால் பணக்கார குடும்பத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. சொந்த வீடு வாங்குவீர்கள். சொத்து, சுகம் சேரும். காதலில் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கூடுதல் வருமானம் கிடைக்க வாப்பு உண்டு. சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

Latest Videos

click me!