மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!

Published : Nov 03, 2024, 09:39 AM ISTUpdated : Nov 03, 2024, 09:44 AM IST

Makaram New Year Rasi Palan 2025 in Tamil: 2025 ஆம் ஆண்டு மகர ராசிக்கு கல்வி, வேலை, தொழில், காதல், திருமணம், ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் காணலாம். சனிப் பெயர்ச்சி மகர ராசிக்கு எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

PREV
110
மகர ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – விடிவுகாலம் பிறக்குமா? முடிய போகுது ஏழரை, அள்ளி கொடுக்கும் சனி!
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

Makaram New Year Rasi Palan 2025 in Tamil: 2024 ஆம் ஆண்டின் கடைசி 2 மாதங்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். இதில் நன்மைகளை விட தீமைகளை மட்டுமே அதிகமாக அனுபவித்த மகர ராசியினருக்கு பிறக்கும் 2025 ஆங்கில புத்தாண்டு நல்ல பலன்களை கொடுக்குமா? கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்குமா? ஏக்கமும், எதிர்பார்ப்பும் தான் இப்போதைக்கு அவர்களது கேள்வி. அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஆரோக்கியம், குடும்பம், வேலை, தொழில், பொருளாதாரம், திருமணம், வியாபாரம் ஆகியவற்றின் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

210
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

மகர ராசிக்கான 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன் – கல்வி:

2025 ஆம் ஆண்டு புத்தாண்டைப் பொறுத்த வரையில் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜோதிடம், வேத சாஸ்திரங்கள் படிப்பவர்களுக்கு அமோகமான பலனை தரும். இந்த காலகட்டத்தில் உங்களது புத்திசாலித்தனம் வெளிப்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான ஆண்டாக 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு இருக்கும்.

12 ராசிகளுக்கான 2025 புத்தாண்டு பலன் - ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஒன் லைன் பலன் - யாருக்கு நல்லது நடக்கும்?
 

310
Makaram Rasi New Year Palan 2025 in Tamil, Makaram Rasi, Capricorn New Year 2025 Palan

பொருளாதாரம்:

பொதுவாக யாராக இருந்தாலும் 2025 ஆம் ஆண்டு பொருளாதாரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி இருக்கும். கடந்த ஏழரை ஆண்டுகளாக சனியின் பிடியில் சிக்கி தவித்த மகர ராசியினருக்கு இந்த கேள்வி அதிகமாகவே இருக்கும். அவர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு நிதி நிலையை பொறுத்த வரையில் கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும். எப்போதும் பணத்தை சேமிக்க முயற்சி செய்ய வேண்டும். இது உங்களுக்கு கஷ்ட காலத்தில் கை கொடுக்கும். ஆனால், சனி மற்றும் ராகுவின் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் இருப்பதால் கைக்கு வரும் பணத்தை கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வந்த இடமே தெரியாமல் மறைந்து போகும். அதாவது, செலவாகிவிடும். எனினும் 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் உங்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுப்பார்.

410
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

நிலம், கட்டிடம், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் எப்படி:

இந்த ஆண்டு மகர ராசியினருக்கு நிலம், கட்டிடம், வண்டி வாகனம் வாங்கும் யோகம் இருக்கு. இது எல்லாமே மார்ச் மாதத்திற்கு தான் நடக்கும் வாய்ப்பு உருவாகும். ஏனென்றால் சனி பெயர்ச்சி நிகழ இருக்கிறது. இந்த சனி பெயர்ச்சியுடன் உங்களது ஏழரை சனி காலம் முடிவடைகிறது. அதன் பிறகு என்ன அமோகமான வாழ்க்கை தான். இதுவரையில் உங்களுக்கு எதில் எல்லாம்

கஷ்டம் இருந்ததோ அதில் எல்லாம் இனி யோகமான பலன் தான் கிடைக்கும். சனி போகும் போது மொத்தமாக கொடுத்துவிட்டு தான் போவார். இனி உங்களுக்கு தலைகீழாக வாழ்க்கை மாறும். வீடு கட்டும் யோகம் தேடி வரும். கட்டிய வீடு பாதியில் நின்றாலும் கூட இனி மீண்டும் அதற்கான வேலையை தொடங்குவீர்கள். பண வரவு இருக்கும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இதில் நீங்கள் விரும்பிய உங்களுக்கு பிடித்த கலரில் வண்டி வாகனம் அமையும்.

510
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

மகர ராசிக்கான தொழில் வாழ்க்கை எப்படி?

தொழிலைப் பொறுத்த வரையில் இந்த 2025 ஆம் ஆண்டு கலவையான பலன்கள் கிடைக்கும். எனினும், கடந்த ஆண்டை விட சிறப்பான ஆண்டாக இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை சனியின் கடைசி ஏழரை கட்டம் என்பதால், தொழிலில் மந்த நிலை இருக்கும். மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களை விட்டு சனி பகவான் முற்றிலும் விலகும் நிலையில் உங்களுக்கு தொழில் வாழ்க்கையில் ஓரளவு சாதகமான பலன் கிடைக்கும். 2025 ஆம் ஆண்டு நிகழும் குரு பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும். புதன் பெயர்ச்சியும் சாதகமான பலனை தரும். எந்த வேலையாக இருந்தாலும் கடினமாக உழைத்து அதற்கான பலனை பெற முடியும்.

610
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

வேலை:

இந்த ஆண்டு உங்களது வேலையில் சாதகமான பலனை பெற முடியும். மார்ச் மாதத்திற்கு பிறகு இன்னும் கூடுதலான பலனையே பெறுவீர்கள். வேலையில் மாற்றம் செய்யலாமா என்று கேட்டால் சனி பெயர்ச்சிக்கு பிறகு அதற்கான நேரம் தான். தாராளமாக வேலை மாற்றம் செய்யலாம். அலுவலகத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எனினும், வேலையில் போட்டியாளர்களை சமாளிக்க வேண்டி வரும்.

உங்களுக்கு தெரிந்த யாரேனும் விருச்சிக ராசியாக இருந்தால் அவர்களுக்கான பலன்: விருச்சிக ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – Love மேரேஜ் நடக்குமா? லச்சாதிபதி யோகம் இருக்கா? வருமானம், வேலை?
 

710
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

காதல் வாழ்க்கை:

2025 ஆம் ஆண்டின் முதல் பாதி உங்களது காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். அதன் பிறகு நிகழும், சனி, குரு மற்றும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு சிறிய சிறிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சின்ன சின்ன விஷயத்திற்கு கூட பிடிவாதம் பிடிப்பீர்கள். இதனால், எரிச்சல் கோபம் ஏற்படும். மேலும், பிரியும் நிலை கூட உருவாகலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

810
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

திருமண வாழ்க்கை:

திருமண வயதை எட்டிய மகர ராசியினருக்கு இந்த 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு சாதகமான பலனைத் தரும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். அதன் பிறகு நிச்சயார்த்தம், திருமணம் என்று அடுத்தடுத்து நடந்து முடியும். எனினும், தாம்பத்திய உறவில் விழிப்புணர்வு தேவை. திருமணத்திற்கு பிறகு கவனமாக இருக்க வேண்டும். கடந்த 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு சிறப்பான பலன் தான் கிடைக்கும்.

910
Makaram New Year Rasi Palan 2025 in Tamil, Makaram Rasi New Year Palan 2025 in Tamil

மகர ராசியினருக்கு உடல் ஆரோக்கியம்:

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பெரிய அளவில் உடல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் இல்லை. தைரியமாக இருக்கலாம். உணவு பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாய், வயிறு, மார்பு பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் பிரச்சனை உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை உடன் இருப்பது அவசியம்.

உங்களது வீட்டில் மனைவியோ, கணவனோ அல்லது வேறு யாரேனும் தனுசு ராசியா இருந்தால் அவர்களுக்கான பலன்: தனுசு ராசிக்கான 2025 புத்தாண்டு பலன் – ஒரு காலத்துல ஓஹோனு வாழ்ந்த ராசி - வேலை போகுமா? சம்பளம் கூடுமா?

1010
New Year 2025 Palan Makaram Rasi, New Year Rasi Palan 2025 Makaram, Capricorn New Year Rasi 2025 Palan

மகர ராசியினருக்கு குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்:

2025 ஆம் ஆண்டு நிகழும் சனி பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் பலன் அளிக்கும். ஆனால், ராகு கேது பெயர்ச்சி காரணமாக குடும்ப வாழ்க்கையில் தவறான புரிதல் ஏற்படும். இதனால், குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படும். எனினும் பெரியளவில் பாதிப்பு இருக்காது. வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் இனி சரியாகும். மகர ராசியினருக்கு இந்த 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்ல பலன்களை தரும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories