மீன ராசிக்கான நவம்பர் மாத பலன்: தொழில், வியாபாரம் எப்படி இருக்கும்? வேலையில் சம்பள உயர்வு இருக்குமா?

First Published | Nov 3, 2024, 7:24 AM IST

Meenam Rasi November Matha Palan 2024 in Tamil: நவம்பர் மாதத்தை பொறுத்த வரையில் கிரக நிலைகளின் அடிப்படையில் மீன ராசிக்கு எப்படி பலன்கள் அமையும் என்பதை பார்க்கலாம் வாங்க

Astrology, Meena Rasi November Matha Palan in Tamil

Meenam Rasi November Matha Palan 2024 in Tamil: மீன ராசியைப் பொறுத்த வரையில் இந்த நவம்பர் மாதம் எப்படி இருக்கும்? எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம் வாங்க. மீன ராசிக்கான கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது ராகு சாதகமற்ற வீட்டில் இருக்கிறது. குரு 3ஆம் வீட்டில் இருக்கிறார். சனி 11 மற்றும் 12ஆம் வீட்டிற்கு அதிபதியாக 12ஆம் வீட்டில் தொடர்கிறது. இது சாதகமற்ற வீடு. கேது 7ஆவது வீட்டில் சாதகமற்ற வீட்டில் இருக்கிறது. 12ஆம் வீட்டில் இருக்கும் சனி பகவான் மீன ராசிக்கு ஏழரை வருடத்தின் முதல் இரண்டரை ஆண்டுகள்.

Meenam, Horoscope, Pisces, Novemer Matha Rasi Palan in Tamil

தொழில் கிரகமான சனி இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். இதன் காரணமாக, வேலையில் அதிக அழுத்தம் இருக்கலாம். சனியின் நிலை தொழில் தொடர்பான உங்கள் பொறுமை மற்றும் புத்திசாலித்தனத்தை சோதிக்கலாம். இந்த மாதத்தில் முன்னேற்றம் மற்றும் செயல்திறனுக்காக வேலையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம்.

ஷார்ட் அண்ட் ஸ்வீட் 12 ராசிகளுக்கான நவம்பர் மாத ராசி பலன் அண்ட் பரிகாரம் - யாருக்கு ராஜயோகம் கிட்டும்?
 

Tap to resize

Horoscope, November Matha Rasi Palan in Tamil

இந்த நவம்பர் மாதத்தை பொறுத்த வரையில் கிரக நிலைகள் உங்களது பொறுமையை சோதிக்க கூடியதாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற திட்டமிடல் தேவை. இந்த மாதத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படலாம். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது.

இந்த நவம்பர் மாதம் உங்கள் வாழ்க்கைக்கு எப்படி இருக்கும் மற்றும் குடும்பம், தொழில், ஆரோக்கியம், காதல் போன்ற துறைகளில் நீங்கள் எவ்வாறு பலன்களைப் பெறுவீர்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

Astrology, November Matha Rasi Palan in Tamil Meenam

தொழில், வியாபாரம்:

பன்னிரண்டாம் வீட்டில் தொழில் கிரகமான சனி இருப்பது சுமாரான பலன்களை பெறுவீர்கள். சனியின் 12ஆம் இடத்து பார்வை வேலையில் அழுத்தம் மற்றும் சவால்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக அதிக ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், போட்டியாளர்களிடமிருந்து அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் உருவாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

Astrology, Horoscope, November Matha Rasi Palan Meena Rasi

பொருளாதாரம்:

குரு 3ஆவது வீட்டில் இருப்பதால் பணப்பற்றாக்குறை ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவுகளே உங்களுக்கு அதிகமாக இருக்கும். வருமானம் வரும் போது பணத்தை சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். பணம் விரையம் ஏற்படலாம்.

ஆரோக்கியம்:

உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும். நவம்பர் 15 வரை சூரியன் 8ஆவது வீட்டில் இருக்கிறார். இதன் காரணமாக கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.

Astrology, Horoscope, Zodiac Sign, Meena Rasi November Matha Rasi Palan in Tamil

காதல், திருமண வாழ்க்கை:

காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சாதகமற்ற சூழல் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் இணக்கம் இல்லாமல் இருக்கும். சண்டை சச்சரவு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

குடும்பம் மற்றும் நண்பர்கள்:

அதிக வாக்கு வாதங்கள் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். எனினும் குடும்ப உறகளிடையே ஒற்றுமை மேலோங்கும். அமைதி காப்பது நல்லது.

Astrology, Meena Rasi November Matha Palan in Tamil

பரிகாரம்:

ஓம் குருவே நமஹ என்ற மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் ராகு, கேது பூஜை செய்து வர வேண்டும்.

ஓம் ஹனுமதே நமஹ என்ற மந்திரம் 108 முறை சொல்ல வேண்டும்.

குரு பகவானுக்குரிய பீஜ் மந்திரத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சொல்ல வேண்டும்.

Latest Videos

click me!