சூரியன் செவ்வாய் சேர்க்கை – யாருக்கெல்லாம் ராஜயோகம் அடிக்கும் – காதல் ஒர்க் அவுட்டாகும்?

First Published | Nov 3, 2024, 8:20 AM IST

Sun Mars Conjuction 2024 Palan in Tamil: கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் ராசிகளின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தெந்த ராசியினருக்கு ராஜயோகம் அடிக்க போகிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil, Astrology

Sun Mars Conjuction 2024 Palan in Tamil: சூரிய பகவான் கடந்த மாதம் துலாம் ராசிக்கு எண்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு செவ்வாய் பகவான் கடகத்திற்கு எண்ட்ரி கொடுத்தார். இந்த 2 கிரகங்களும் ஒருவரது ஜாதகத்தில் முக்கிய வங்கி வகிக்கின்றன. எப்படி என்றால் சூரியன் கிரகங்களின் ராஜா என்றும், செவ்வாய் கிரகங்களின் தளபதி என்றும் அழைக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் ஒருவரது ஜாதகத்தில் 2 முக்கியமான துறைகளுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றன. இந்த 2 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில் 12 ராசிகளுக்கான பலன்கள் நவம்பர் 16ஆம் தேதி வரை எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. சூரியன் மற்றும் செவ்வாய் இரண்டுமே நவம்பர் 16 ஆம் தேதி வரையில் அதே ராசியில் இருக்கும். அதன் பிறகு பெயர்ச்சி ஆகும்.

Sun Mars Conjuction 2024, Horoscope, Pisces

மீன ராசிக்காரர்கள்:

இவர்கள் கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் வாக்குவாதம் ஏற்படும். செரிமானம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. செல்வத்திற்கு அதிபதி செவ்வாய் காரகன். சாதகமற்ற நிலையில் இருப்பதால் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நிலை வரலாம். முதலீடு செய்யும் போது எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும்.

Tap to resize

Aquarius, Sun Mars Conjuction 2024 Palan in Tamil

கும்பம்:

இவர்களுக்கு வேலையில் பணியிட மாற்றம் உண்டாகும். எனினும் அவசரம் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சகோதரர்களுக்கிடையில் சண்டை சச்சரவு உண்டாகும் சூழல் வரும். அதே போன்று அக்கம் பக்கத்தாரை அனுசரித்து செல்ல வேண்டும். இல்லையென்றால் சண்டை தான் வரும். தாயாரது உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டி வரும்.

Sun Mars Serkkai, Astrology

மகரம் ராசி:

மகர ராசி அன்பர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தாயாரது உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். ரத்த அழுத்தம், தசை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இடையூறுகள் ஏற்படவும், உத்தியோகஸ்தர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.

Horocope, Sun Mars Conjuction 2024 Palan in Tamil

தனுசு ராசிக்கான சூரியன் செவ்வாய் இணைவு பலன்:

வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். இல்லையென்றால் மருத்துவ செலவுகள் ஏற்படக் கூடும். மூதாதையரின் பணம், சொத்து சம்பந்தமான தகராறுகள் வரலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை அதிகரிக்கும்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

விருச்சிகம்:

வெளியூர், வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களுடன் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இரத்த அழுத்தம், இதய நோய்கள், மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

துலாம்:

சூரியனும் செவ்வாயும் நீச்ச லக்னத்தில் இருப்பதால், வேலை செய்யும் இடத்தில் டென்ஷன், ஈகோ போன்ற காரணங்களால் நெருக்கியவர்களுடன் வாக்குவாதம், சண்டை சச்சரவுகள் ஏற்படக் கூடும். இதனால் நீங்கள் அவமானங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

கன்னி:

கன்னி ராசியினருக்கு பணப்பற்றாக்குறை ஏற்படலாம். பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். ஈகோ பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

சிம்மம்:

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படக் கூடும். அண்ணன் தம்பி உறவில் கவனம் வேண்டும். பேச்சி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் டென்ஷன் அதிகமாகி உடல்நல பாதிப்பு ஏற்படக் கூடும். அக்கம் பக்கத்தாரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

கடகம்:

இந்த காலகட்டத்தில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இரத்த அழுத்தம் மற்றும் தசை வலி பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

மிதுனம்:

நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மூலம் நிதி உதவி பெறும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும். கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் சண்டை வரக் கூடும். ஒற்றை தலைவலி பிரச்சனை அதிகரிக்க கூடும்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

ரிஷபம்:

நிலம், கட்டிடம் ஆகியவற்றால் ஆதாயம் ஏற்படும். வீட்டில் அலைச்சல் ஏற்படக் கூடும். உடலில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திருமண வாழ்க்கையில் சிக்கல் உண்டாகும் வாய்ப்பு இருக்கிறது. திருமணமான பெண்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

Sun Mars Conjuction 2024 Palan in Tamil

மேஷம்:

சூரியன் மற்றும் செவ்வாய் பகவான் நிலையின் தாக்கம் உங்களுக்கு சில சவால்களை கொண்டு வந்து தரும். குடும்பத்தில் டென்ஷன் அதிகரிக்கும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எலக்ட்ரிக் பொருட்கள் மற்றும் வண்டி, வாகனங்களில் பிரச்சனை ஏற்படக் கூடும். வண்டி வாகனங்களை சர்வீஸ் செய்து பயன்படுத்த வேண்டும்.

Latest Videos

click me!