
வேத ஜோதிடத்தின்படி கிரகங்களின் இயக்கம் மற்றும் அவற்றின் சேர்க்கை மனிதர்களின் வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை தருகிறது. இரண்டு கிரகங்கள் இணையும் பொழுது உருவாகும் ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களை தருகிறது. குறிப்பாக விரதம் மற்றும் பண்டிகைகளின் போது உருவாகும் சிறப்பு ராஜயோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு அதிக அளவு நன்மைகளை வழங்கும். அந்த வகையில் நவராத்திரி தினத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாகவும், சிறப்பான பலன்களை வழங்கும் ராஜயோகமாகவும் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22, 2025 அன்று தொடங்கி அக்டோபர் 2, 2025 அன்று முடிவடைகிறது. நவராத்திரியின் பொழுது செப்டம்பர் 24 ஆம் தேதி சந்திரன் துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். துலாம் ராசியில் ஏற்கனவே செவ்வாய் இருக்கும் நிலையில் இந்த இரண்டு கிரகங்களின் இணைப்பால் சிறப்பு வாய்ந்த மற்றும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன்களை தரவுள்ளது. இந்த யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நன்மைகளை பெற உள்ளனர். அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
துலாம் ராசிக்காரர்களின் முதல் வீட்டில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாவதால் துலாம் ராசியை சேர்ந்தவர்கள் பல நன்மைகளைப் பெற உள்ளனர். இந்த யோகம் உங்கள் தன்னம்பிக்கை, ஆளுமை மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்கும். நீங்கள் தைரியமாகவும், தெளிவாகவும் முடிவெடுப்பீர்கள். உங்களுக்குள் புதிய உற்சாகம் பிறக்கும். உங்கள் இலக்குகளை நோக்கி வேகமாக நடப்பீர்கள். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி நிலவும். இதன் காரணமாக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவாக உணர்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என அனைத்திலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மகர ராசியின் கர்ம ஸ்தானத்தில் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக உங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. அரசு உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும். வணிகர்களும் பெரிய லாபம் ஈட்டலாம். புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் இரட்டிப்பாகும். நீங்கள் வேலைகளை மாற்ற விரும்பினால் இந்த நேரம் சாதகமாக இருக்கும். வணிகப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். உங்கள் சமூக அந்தஸ்து உயரும். எதிரிகளை விட நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி ராஜயோகம் நல்ல அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. இந்த யோகம் ஒன்பதாவது வீடான பாக்ய ஸ்தானத்தில் உருவாகிறது. இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். இதன் காரணமாக ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க அல்லது வேலை பார்க்க நினைப்பவர்களின் கனவு நிறைவேறும். தந்தை வழி உறவுகள் வலுப்படும். மகாலட்சுமி ராஜயோகத்தால் அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)