Astrology: தோல்வி பயமே இல்லாத 3 ராசிகள்.! குருவின் பார்வையால் ஜல்லிக்கட்டு காளையாய் சீறுவார்களாம்.!

Published : Sep 09, 2025, 09:57 AM IST

மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் தோல்வியை அஞ்சாமல், சவால்களை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிபெறுவார்கள். குரு, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களின் சக்தியால் இவர்களை யாராலும் தடுக்க முடியாது.

PREV
16
தோல்விக்கு அஞ்சாத தோழர்கள்.!

இன்றைய காலத்தில் பலர் ஒரு சிறிய தடையை சந்தித்தாலே மனம் தளர்ந்து விடுகிறார்கள். ஆனால் ஜோதிடப்படி சில ராசிக்காரர்கள் மட்டும் தோல்வி என்ற சொல்லையே அஞ்சமாட்டார்கள். இவர்கள் எப்போதும் வெற்றியை குறிவைத்து உழைப்பவர்கள். குருவின் சக்தி சனியின் சோதனை செவ்வாயின் உற்சாகம்  ஆகிய இந்த மூன்றும் சேரும்போது இவர்களை தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு காளை போல பாய்ந்து எதிரிகளை அடக்கி வெற்றியை தங்கள் வசப்படுத்துவார்கள். இப்போது அந்த 3 ராசிகளை விரிவாகப் பார்ப்போம்.

26
உழைப்பு எனும் ஜோதிட ரகசியம்.!

கடின உழைப்புடன் கூடிய தைரியம் சிலருக்கு உற்சாகத்தை கொடுத்து அது இலக்கை அடைய வழிவகுக்கும். அதேபோல் எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் சிலர் எந்தவொரு விஷயத்தையும் சீரிய முறையில் செய்தி அதில் வெற்றி காண்பர். அதற்கு அவர்களுடைய உழைப்பு மற்றும் அவர்களது ராசிகள் காரணம் என்கின்றன ஜோதிட நூல்கள்.

36
மேஷ ராசி (Aries) - எதிரிகளின் சதி எதுவும் இவர்களை பாதிக்காது

இன்முகத்திற்கு சொந்தகாரரான மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் ஆட்சி வழிகாட்டும். இவர்களுக்கு இயல்பிலேயே தைரியமும், ஆவேசமும் அதிகம். தோல்வி என்றால் என்ன என்று இவர்களுக்கு தெரியாது. ஒரு தடையை சந்தித்தால் அதை மீறுவதற்கான புது வழிகளை கண்டுபிடிப்பார்கள். குருவின் பார்வை இவர்களுக்கு துணையாக இருக்கும் போது  தங்கள் தொழில், கல்வி, போட்டிகள் எல்லாவற்றிலும் முன்செல்வார்கள். எதிரிகளின் சதி எதுவும் இவர்களை பாதிக்காது. எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும், அதை வெற்றியாக்கும் தன்மை இவர்களிடம் உண்டு.  ஓடி மறைவதல்ல, பாய்ந்து வெல்வதே நம் கடமை என்பதே இவர்களின் வாழ்க்கை கோட்பாடு.

46
சிம்ம ராசி (Leo) - விழுந்தால் உடனே எழுவர்.!

சூரியனின் ஆதிக்கம் பெற்ற ராசி என்பதால், சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும், அது அவர்களின் மன உறுதியைத் தளர்த்தாது. தோல்வியைச் சந்தித்தாலும் கூட அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் ஒரு முடிவெடுத்தால், அதை மாற்ற முடியாது. அவர்களின் உற்சாகம், தலைமைக் குணம், குருவின் ஆசீர்வாதம் – இவை எல்லாம் சேர்ந்து, அவர்களை வெற்றி பாதையில் முன்னேற்றும். ஜல்லிக்கட்டு காளை போல, இவர்களை யாராலும் அடக்க முடியாது.

56
தனுசு ராசி (Sagittarius) - எப்போதும் தெய்வீக பாதுகாப்பு இருக்கும்

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு கிரகத்தின் நேரடி ஆட்சி உள்ளது. எனவே இவர்களுக்கு எப்போதும் தெய்வீக பாதுகாப்பு இருக்கும். வாழ்க்கையில் எத்தனை முறை விழுந்தாலும், மறுபடியும் எழுந்து நிற்பார்கள். அறிவு, தைரியம், நம்பிக்கை – இவை இவர்களின் பலம். தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்வார்கள். தோல்வியை ஒரு முடிவு என நினைக்காமல், ஒரு பாடமாக எடுத்துக்கொள்வார்கள். குருவின் பார்வை இவர்களை எல்லா துறைகளிலும் முன்னேற்றும். “நான் செய்வேன், சாதிப்பேன்” என்ற மன உறுதியால், இவர்களை யாராலும் தடுக்க முடியாது.

66
உலகம் உங்கள் கையில்.!

தோல்வியை அஞ்சாமல், சவால்களை நேருக்கு நேர் சந்தித்து வெற்றிபெறும் மூன்று ராசிகள் – மேஷம், சிம்மம், தனுசு. இவர்களின் வாழ்க்கை எப்போதும் போராட்டமே ஆனாலும் அந்த போராட்டமே அவர்களை வெற்றியாளர்களாக ஆக்குகிறது. ஜல்லிக்கட்டு காளை எப்படி சாவடியில் இருந்து பாய்ந்து வெளியில் வந்து மைதானத்தை அதிரவைக்கிறதோ அதுபோல இந்த ராசிக்காரர்களும் தடைகள் வந்தாலும் அதை உடைத்து முன்னேறும் வீரர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories