Zodiac Sign: இந்த 3 ராசிகளுக்கும் எப்பவுமே செம "லக்" தெரியுமா.? தேடிப் போகாமலேயே பொண்ணு கிடைக்குமாம்.! 25 வயதிற்குள் செட்டில் ஆவார்களாம்.!

Published : Jul 28, 2025, 07:48 AM IST

மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு பிறந்ததில் இருந்தே அதிர்ஷ்டம் அடிக்கும். இவர்கள் வாழ்க்கையில் எதையும் தேடி அலைய வேண்டியதில்லை, 25 வயதிற்குள் காதல், திருமணம், வேலை என அனைத்தும் அமையும்.

PREV
15
எப்போதும் வீசும் அதிர்ஷட காற்று.!

சில ராசியினருக்கு பிறந்ததில் இருந்தே அதிர்ஷ்ட காற்று அடிக்கும். எல்லா விஷயமும் இனிதே நடந்தேறும். அதேபோல் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இளம் வயதிலேயே செட்டிலாகி அழகான மகிழ்ச்சியான சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சூழல் உருவாகும. ஒருவர் பிறந்த ராசி அவருடைய வாழ்க்கையை சிந்தனையை, அவருடை முன்னேற்றத்தை தீர்மானிக்கும் சக்தி என பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். நம் நட்சத்திர அமைப்புகள் திருமணம், வேலை மற்றும் வியாபாரம் ஆகியவற்றின் நிலைப்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜோதிட அடிப்படையில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டம் நிலவுகிறது என்பது அனைவரும் நம்பும் ஒரு மறுக்க முடியாத உண்மை. இங்கே நாம் பார்க்கப் போவது, எப்போதும் செம லக் கோட இருக்கின்ற மூன்று ராசிகளின் ரகசியங்கள். அவர்கள் வாழ்க்கையில் எதையும் தேடி அதிகம் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லாமல், எதை நினைக்கிறார்களோ அது அவர்களுக்கு தானாகவே கிடைக்கும். 25 வயதிற்குள் நல்ல காதல் வாழ்க்கை, திருமணம் என செட்டிலாகும் அவர்களுக்கு கிடைக்கும்.

25
மேஷ ராசி (Aries) – அதிர்ஷ்டத்தின் அடையாளம்.!

பிறக்கும் போதே அதிர்ஷ்ட மச்சம்

எதையும் குறி வைச்சி அடிக்கும் திறன் கொண்ட மேஷராசியினரை அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொன்னால் அது மிகையல்ல. அவர்கள் முயற்சி செய்தால் எதிலும் மெயின் கெயின் கிடைக்கும் என்கிறது ஜோதிட நூல்கள். மேஷ ராசியினருக்கு இருக்கும் சரியான முடிவெடுக்கும் தன்மை அவர்களை தலைமையிடத்திற்கு அழைத்து செல்லும். அன்பு செலுத்தும் தன்மை, முயற்சி, எதிலும் ஈடுபாடு, நல்ல சிந்தனை ஆகியவை மேஷராசியினரின் அடையாளங்கள்.இவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்துக்கிட்டே காத்திருக்க மாட்டார்கள். ஆனால் அதிர்ஷ்டம் மட்டும் இவர்களுக்காக நெடுநேரம் காத்திருக்கும்.!

எல்லாமும் தேடி வரும், அனைத்தும் கூடி வரும்

மேஷ ராசிக்காரர்களுக்கு 22-25 வயதுக்குள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை வரும். நல்ல வேலை வாய்ப்பு, அல்லது உறவுப் பாதையில் எதிர்பாராத காதல் என்று அமையலாம். காதல் வாழ்க்கையில் இவர்களது நேர்த்தியான பேச்சு, நேர்மையான அணுகுமுறை, காதலரை வசீகரிக்க வைத்து விடும். இவர்களுக்குத் தேடி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது, தேவையானவர் தானாகவே வந்து சேருவார்கள். வீட்டில் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றாலும் 25 வயதிற்கு நடந்தே தீரும். தொழில், திருமணம், சொத்து என எதையும் 25க்குள் அடைய ஒரு வாய்ப்பு பெரும்பாலான மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். திரைப்படம்,பொதுபோக்கு, வியாபாரம் என எந்ததுறையில் இருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்ட காத்து அடித்து கொண்டே இருக்கும்.

35
சிம்ம ராசி (Leo) – பிறவியிலே ராஜயோகம்.!

காதல், செல்வம், புகழ் தேடிச் செல்லாமலேயே ஓடி வரும்

சிம்மம் என்பது உலகையே வழிநடத்து் கிரகமான சூரிய பகவானின் ராசியாகும். ஒரு சக்கரவர்த்தியின் குணங்கள் இவர்களிடம் இருக்கும். நிறைந்த தன்னம்பிக்கை, வசீகரிக்கும் செம்மையான பொலிவு, அவர்களுக்கேயான தனிப்பட்ட ஸ்டைல், அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஆளுமை, இவை எல்லாம் இவர்களுக்கே சொந்தம் என கூறுகின்றன ஜோதிட நூல்கள்.

தனித்துவம், தன்னம்பிக்கை, நேர்மை

சிம்ம ராசிக்காரர்கள் எங்க சென்றாலும், அவர்கள் தனித்துவமான செயல், பேச்சு, நடத்தை மற்றும் கவர்ச்சியால் மற்றவர்களின் கவனத்தை டக்கென்று ஈர்க்கிறார்கள். இவர்களுக்கு காதல் வாழ்க்கையிலும் அதிர்ஷ்டம் நெருங்கி நிற்கும். காதலர் யாராக இருக்க வேண்டும் என்று சிம்ம ராசிக்காரர் நினைத்தால், அந்த நபரை வெல்வது இவர்களுக்குச் சுலபமான காரியம் என்றால் அது நூற்றுக்கு நுறு உண்மையே. வீடு, கார், வேலை, வாழ்க்கைத் துணை உள்ளிட்ட எல்லாமே சிம்ம ராசிக்காரர்களுக்கு 25க்குள் சாத்தியமாகும் என்கிறது ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

45
தனுசு ராசி (Sagittarius) – அதிர்ஷ்டத்தின் பிரமாண்ட பேக்கேஜ்.!

வாழ்க்கை முழுக்க பின் தொடரும் சர்ப்ரைஸ் பாக்ஸ்.!

நல்ல மனுசு உள்ள தனசு ராசியினருக்கு எப்போதுமே, அதாவது ஒவ்வொரு நிமிடமும் சர்ப்பரைஸ் கிப்ட் கிடைத்துக்கொண்டே இருக்குமாம். தனுசு ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை மிகச் சுதந்திரமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால் அதே நேரத்தில், அவர்களுக்குள்ளேயே எல்லோரும் ரசிக்கும் வகையிலான நகைச்சுவை உணர்வு, நேர்மை, எதையும் ஜெயிக்கும் தன்னம்பிக்கை, அனைவரையும் வசீகரிக்கும் அன்பு, மாறுபட்ட சிந்தனைக் திறன், வாழ்க்கைக்கு தேவையான ரொமான்டிக் ஆகியவையும் சேர்ந்தே இருக்குமாம்.

எதிலும் எப்போதும் வெற்றி

தனுசு ராசிக்காரர்களுக்கு, காதலும், திருமணமும் எதிர்பாராத நேரத்தில் நிகழுமாம். அவர்கள் மிக எளிமையான சூழ்நிலையில் கூட, ஒருவர் இவர்களிடம் கட்டுப்பட்டு மனதை பறிகொடுத்து விடுவார்களாம். காதல் வாழ்க்கையில் தனுசு ராசிக்காரர்கள் ரொம்பவே சிரிக்க வைக்கும், அன்பு கொடுக்கும் ஆட்களாக இருப்பார்களாம்.

வழிநடத்தும் நல்ல சிந்தனை

தனசு ராசிக்காரர்களுக்கு 23 முதல் 25 வயதுக்குள் வேலை, வருமானம், வாழ்க்கைத்துணை போன்றவை சரியாக செட் ஆகும். என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள் அதிர்ஷ்டம் இவர்களை ஒரு கையில் பிடித்து வழி நடத்தும் என்றால் அது மிகையல்ல. சாதனைகளும் தொடர் வெற்றிகளும் பின்னே வருவதே இவர்களது ட்ரேட்மார்க்காக இருக்கும் என்கிறது ஜோதிட நூல்கள்.

55
அந்த மூன்று பேருக்கு அதிர்ஷ்டம்

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசியினரும் வாழ்க்கையில் எதையும் தேடி அலைய வேண்டியதில்லையாம். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள், நல்ல காதல் வாழ்க்கை, சிறந்த துணை, 25க்குள் வாழ்க்கை செட்டில் ஆகும் வாய்ப்பு கிடைக்குமாம். இவை அனைத்தும் இவர்களுக்கே சாத்தியமான விஷயங்கள் என்கின்றன ஜோதிட நூல்கள். தினமும் சிறிது முயற்சி செய்தால் போதும். நட்சத்திரங்களின் ஒளிக்கதிர்கள் உங்கள் வாழ்க்கையை ஒளிர வைக்கும், சிறக்க வைக்கும், சாதிக்க வைத்து வழிநடத்தி வாழ்வில் ஜெயிக்கக வைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories