
எப்போதும் நேர்மையின் பக்கம் நிற்கும் மேஷராசி நேயர்களே, இன்று உங்கள் ஆரா உச்சத்தில் இருக்கும். சந்தோஷமும், வெற்றியும் உங்கள் காலடிக்கு ஓடிவரும். திட்டமிட்டப்படி எல்லா பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அதிக மரியாதை தருவார்கள். நினைத்ததை செய்து முடித்து சாதனை படைப்பீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் பாராட்டும் நிகழ்வு அரங்கேறும். தொழிலில் உங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகள் குறித்த நற்செய்தி கிடைக்கும். தம்பதிகள் இடையே நல்ல புரிதல் ஏற்படும். சிலர் உங்கள் சாதனைக்கு எதிராக தவறான செய்தியை பரப்பக்கூடும் என்பதால் சிறிது எச்சிரிக்கையாக இருக்கவும். இருந்த போதிலும் உங்கள் தைரியத்தால் வெற்றி உறுதியாகும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு சந்தோஷத்தத்தையும் நிம்மதியையும் பரிசளிக்கும்.
எதிலும் குறிவைத்து வெற்றியை நேர்மையாக சுவைக்கும் திறன் உடைய ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்கள் மனநிலை அமைதியாக இருக்கும். பெற்றோர்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள். நீண்ட நாட்களாக நீடித்து வந்த சொத்து பிரிச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நிதி மேன்மை அடையும். பண வரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். பழைய கடன்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வந்து ஆதரவு தருவார்கள். உங்களின் நெருங்கிய நண்பர்களின் ஆலோசனைகள் வெற்றியை தேடிதரும். குழந்தைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு நல்லதை மட்டுமே கொடுக்கும்.
அன்புக்கும் விட்டு கொடுக்கும் மனப்பான்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு முடிவெடுக்கும் திறமை அதிகரிக்கும். தொழில் மற்றும் அலுவலகத்தில் உங்கள் யோசனைக்கும் எடுக்கும் முடிவுக்கும் அதிக ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். புதிய முதலீடுகளுக்கும், தொழில் விரிவாக்கத்திற்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எல்லோரிடமும் அன்பாகவும், நிதானமாகவும், பொறுமையாகவும் பேசவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவும் சூழல் உருவாகும். மொத்தத்தில் உங்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீண்ட நாள் நல்ல ஆசைகளை நிறைவேற்றும்.
உண்மையின் வழியில் சென்று சாதனை படைக்க வேண்டும் என் எண்ணத்துடன் இருக்கும் கடக ராசி நேயர்களே, இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும். அடுத்தவர்களுக்கு உதவும் சூழல் உருவாகும். நண்பர்களும், உறவினர்களும் உதவி கேட்டு தொடர்பு கொள்வர். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். வீட்டிற்கு உறவினர்கள் வருகை தந்து சந்தோஷ செய்திகளை அள்ளித் தருவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளுடன் கூடிய சமபள உயர்வு தேடிவரும். குடும்பத்தில் தாய்மாமன் வழியில் நல்ல செய்தியும், நிதி உதவியும், புதிய தொழில் குறித்த செய்தியும் உங்களுக்கு தேடி வரும். முக்கியமான பத்திரங்களை கவனமாக கையாளவும். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித்தரும்.
மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்களை நல்வழிப்படுத்தி வழிநடத்தும் சிம்ம ராசி நேயர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் செயல்பட வேண்டிய நாள். தொழில் மற்றும் அலுவலகத்தில் நீங்கள் எடுத்த முடிவுகள் பிறரின் பாராட்டை பெறும். வணிகம் மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணக்கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். நீங்கள் சொல்வதை உங்கள் மனைவி உள்ளிட்ட அனைவரும் கேட்டுநடப்பர். மகளிர் சாமர்த்தியத்தால் குடும்ப நிலை உயர்வடையும். எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படலாம். வாகனம், வீடு உள்ளிட்ட சொத்து வாங்குவது குறித்து சிந்தனை மேலோங்கும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு நல்ல உறவுகளையும் அவர்களின் முக்கித்துவத்தையும் புரியவைக்கும்.
நீதியின் பக்கம் நின்று எதையும் சாதிக்கும் கன்னி ராசி நேயர்களே, அலுவலகத்தில் உங்கள் ஆற்றலை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வேலைபளு அதிகரிக்கும் என்பதால் திட்டமிட்டு செயல்பட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும். கொஞ்சம் முயற்சி செய்தால் சாதனையை எளிதில் அறுவடை செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனை மாற்றத்தை உருவாக்கும். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உங்களுக்கு அதரவாக செயல்படுவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஆனால் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். நீண்டநாள் கடன்கள் வந்து சேரும். பழைய நண்பர்களை சந்தைத்து நேரம் செலவிடுவீர்கள். உறவினர்கள் வருகை வீட்டில் சுப நிகழ்ச்சிக்கு வழிவகுக்கும். திருமண பேச்சு முடிவுக்கு வரும்.
நல்லவர்களை தேடி தேடி சென்று உதவி செய்யும் அன்புள்ளம் கொண்ட துலாம் ராசி நேயர்களே இன்று உங்களின் நீண்டநாள் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களை நிரூபிக்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்ததை விட பணவரவு பல மடங்கு அதிகரிக்கும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் பிறக்கும். திருமண பேச்சுகள் முடிவுக்கு வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவி செய்ய முன்வருவர். ஆலயங்களுக்கு சென்று வரும் சூழல் ஏற்படும். தொலைதூர செய்திகள் சந்தோஷம் தரும். நீண்ட நாளாக வராமல் இருந்த பணம் உங்களிடமே திரும்ப வரும். தொழில் தொடர்பான பயணம் வெற்றி தரும். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களை சுப்பசெலவு செய்ய வைக்கும்.
நேர்மையின் மறு உருவமாக வாழ்ந்து வரும் விருட்சிக ராசி நேயர்களே, இன்று உங்கள் மன நிலையை கட்டுப்படுத்துவது முக்கியம். குடும்பத்தில் உங்கள் வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது. பணியிடத்தில் நெருக்கடி அதிகரிக்கலாம். பெண்களால் நன்மை உண்டு. பழைய நண்பர்களை தொடர்புகொள்ளம் போது நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவி கேட்கும சூழல் உருவாகம். பயணங்களில் பாதுகாப்பு தேவை. குல தெய்வ வழிபாடு நிம்மதி தரும். மொத்தத்தில் இன்றைய தினம் வாழ்க்கை பாடத்தை கற்றுத்தரும்.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் உண்மை மற்றும் நேர்மையின் பக்கம் நிற்கும் தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறந்த முடிவுகளை எடுக்கும் திறமை வெளிப்படும். உங்களின் பழைய அனுபவம் இன்று பெரிதும் பயனளிக்கும். வணிகம் மற்றும் வியாபாரத்தில் நம்பிக்கையான நபர்களால் வளர்ச்சி ஏற்படும். லபாம் மற்றும் வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய வழிகாட்டல் தேவைப்படும். வெளிநாட்டு வாய்ப்பு தேடும் முயற்சியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும், புரிதல் ஏற்படும், விட்டுக்கொடுத்து சென்றால் சந்தோஷம் பல மாதங்களுக்கு நீடிக்கும். மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு ஆனந்தத்தை மட்டும் கொடுக்கும் நல்ல நாள்.
எப்போதும் சுறுசுறுப்பாக செல்படும் மகரராசி நேயர்களே இன்று உங்கள் பணி மேலதிகாரிகள் பாராட்டை பெறும். உற்சாகத்துடனும் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். பண வரவு திருப்தி தரும். சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கேட்கும் முன்பே கிடைக்கும். குடும்ப உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். பயணம் மற்றும வாகன பராமரிப்பில் அதிக கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மொத்தத்தில் இன்றைய தினம் உங்களுக்கு அன்பையும், சந்தோஷத்தையும் அள்ளித்தரும்.
பெரியோர்களை மதித்து நடக்கும் குணம் கொண்ட கும்பராசி நேயர்களே இன்று உங்கள் யோசனைகள் வெற்றி பெறும். வியாபாரம் மறறும் தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் உதவி நிம்மதியை தரும். குடும்பத்தில் சிலர் உங்கள் முடிவுகளை எதிர்த்தாலும் இறுதியில் உங்களை புரிந்துகொள்வர். சொத்து, வீடு வாங்குவதற்கு வழி பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் சூழல் உருவாகும். தடைப்பட்டு இருந்த திருமண பேச்சுகள் சுபமாக முடியும். மொத்தத்தில் இன்றைய நாள் நல்லதை அள்ளித்தரும் நாள்.
சொல்வதை மட்டும் செய்யும் மீன ராசி நேயர்களே, இன்று சிறந்த வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும் என்பதால் அதனை அப்படியே பிடித்துக்கொள்ளவும். நீங்கள் நேசிக்கும் நபரிடம் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். குடும்ப உறவுகளில் அதிலும் தம்பதிகள் இடையே இனிமை காணப்படும். வியாபாரம் செய்வோருக்கு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். பணக்குழப்பங்கள் முடிவுக்கு வரும். தேடி வரும் சொந்தங்களை வரவேற்று உபசரிக்கவும். மொத்தத்தில் உங்களுக்கு இன்றைய நாள் நல்லவர்களை அடையாளப்படுத்தும்.