Astrology: முருகப் பெருமானுக்கு பிடித்த 4 ராசிகள்.! இவர்களுக்கு வாழ்க்கையில துளி கஷ்டம் கூட வராதாம்.!

Published : Oct 27, 2025, 01:25 PM ISTUpdated : Oct 27, 2025, 01:28 PM IST

Lord Murugan Favourite Zodiac Signs: ஜோதிடத்தின் படி முருகப்பெருமானுக்கு பிடித்த ராசிகள் என்று சில ராசிகள் கூறப்பட்டுள்ளன. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
முருகப்பெருமானுக்கு பிடித்தமான 4 ராசிகள்

முருகப்பெருமான் தமிழ் கடவுளாக அறியப்படுகிறார். இவருக்கு உகந்த விழாவான கந்த சஷ்டி விழா தமிழகத்தின் பல கோயில்களிலும் இன்று (அக்.27) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி தினத்தில் விரதம் இருந்து முழு நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர்களுக்கு முருகப்பெருமானே குழந்தையாய் வந்து பிறப்பார் என்பது மக்களின் நம்பிக்கை. முருகப்பெருமான் தன்னை வழிபடும் அனைத்து பக்தர்களுக்கும் அருளை வழங்குவார் என்ற போதிலும் ஜோதிடத்தின் படி சில ராசிகள் முருகப்பெருமானுக்கு பிடித்தவையாக கருதப்படுகின்றன. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். முருகப்பெருமான் செவ்வாய் பகவானுக்கு உரிய அதிதேவதையாக ஜோதிடம் கூறுகிறது. செவ்வாய் கிரகம் வீரம், தைரியம், தலைமைப் பண்பு, துணிச்சல் ஆகியவற்றை குறிக்கிறது. முருகப்பெருமான் தேவசேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) என்று அழைக்கப்படுபவர். அவர் அசுரர்களை அழித்து தேவர்களை காத்த வீரத்திருமகனார். மேஷ ராசியின் போராடும் குணம், தலைமைத்துவ ஆற்றல் மற்றும் துணிச்சல் ஆகியவை முருகனின் வீர அம்சங்களுடன் ஒத்துப்போகிறது. எனவே மேஷ ராசிக்காரர்கள் முருகப்பெருமானுக்கு பிடித்தமான ராசிகளில் ஒருவராக இருக்கிறார்.

36
விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய் பகவான் தான். விருச்சிக ராசிக்காரர்கள் மனவலிமை, சவால்களை கடக்கும் ஆற்றல், ஞானம் ஆகியவற்றை பெற்றுள்ளனர். முருகப் பெருமான் ஞானத்தின் வடிவமாகவும், தடைகளை கடந்து வெற்றி பெறும் ஆற்றலுடனும் விளங்குகிறார். விருச்சிக ராசியின் தன்னம்பிக்கை, தளராத முயற்சி, வெற்றி மீதான வேட்கை ஆகியவை முருகப் பெருமானின் அம்சங்களுடன் ஒத்துப்போகிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு முருகப்பெருமான் ஞானத்தையும், சவால்களை எதிர்கொண்டு மன தைரியத்துடன் வெற்றி பெறுவதற்கான ஆற்றலையும் வழங்குகிறார் என்று ஜோதிடம் கூறுகிறது.

46
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். முருகன் ஒளி, ஆற்றல், தலைமைப் பொறுப்பு மற்றும் அதிகாரத்தின் உருவமாக போற்றப்படுகிறார். சிம்ம ராசிக்காரர்களின் ஆற்றல், தலைமைப் பண்பு, வீரம், நீதி உணர்வு ஆகிய குணங்கள் முருகனின் அம்சங்களை ஒத்திருப்பதால் இவர்களுக்கு முருகனின் அருள் எளிதில் கிட்டும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிம்ம ராசிக்காரர்களுக்கு வசீகரம், தலைமைப் பண்புகள், கம்பீரம், ஆற்றல் ஆகியவற்றை முருகப்பெருமான் அபரிமிதமாக வழங்குகிறார். சிம்ம ராசிக்காரர்கள் முருகனின் தெய்வீக ஒளியையும், அதிகாரத்தையும் பிரதிபலிக்கின்றனர்.

56
துலாம்

துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகிறார். துலாம் ராசிக்காரர்கள் சமநிலை, நீதி, ஞானம் மற்றும் தர்மத்தை பெற்றுள்ளனர். முருகப் பெருமான் தர்மம் மற்றும் நீதிக்காக போராடுபவர். துலாம் ராசிக்காரர்கள் நீதி உணர்வுடனும், உயர்ந்த லட்சியத்துடனும் பாடுவதால் அவர்களின் நற்குணங்களுக்காகவே முருகன் அவர்கள் பக்கம் துணை நிற்பார் என்று ஜோதிடங்கள் கூறுகிறது. முருகனின் துணைவியான வள்ளி செல்வத்திற்கு காரணமான சுக்கிரனின் அம்சமாக கருதப்படுவதும் துலாம் ராசிக்காரர்கள் முருகப்பெருமானின் விருப்பமான ராசிகளில் ஒன்றாக இருப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.

66
முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள்

ராசிகளைத் தவிர முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் அவரின் சிறப்பு அருளைப் பெறுவார்கள் என்று ஜோதிடம் கூறுகிறது. கார்த்திகை நட்சத்திரம் என்பது முருகனின் ஆறுமுகங்கள் தோன்றிய நட்சத்திரமாகும் எனவே கார்த்திகை நட்சத்திரம் முருகனின் விருப்பமான நட்சத்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. விசாக நட்சத்திரம் முருகன் அவதரித்த நட்சத்திரமாகும். எனவே விசாகம் முருகன் பெருமானுக்கு பிடித்த நட்சத்திரங்களில் ஒன்றாகும். அதே போல் சில ஜோதிட மரபுகளில் பூர நட்சத்திரமும் முருகனுக்கு விருப்பமான நட்சத்திரமாக கூறப்படுகிறது.

ஜோதிட ரீதியாக சில ராசிகள் முருகப்பெருமானுக்கு உகந்ததாக குறிப்பிடப்பட்டாலும் பக்தி ஒன்றே முருகனுக்கு பிரதானம். தூய்மையான மனதுடன் முருகனை வணங்குபவர்களுக்கு அவர் தனது அருளை வாரி வழங்குகிறார். தன்னம்பிக்கை, நல்ல எண்ணம், கடமை உணர்வுடன் செயல்படுபவர்கள் அனைவருக்கும் முருகப் பெருமானின் அருள் எப்போதும் உண்டு. எனவே ராசியைப் பற்றி கவலைப்படாமல் அன்பு, நேர்மை மற்றும் பக்தியுடன் முருகப்பெருமானை வணங்குவது அவரின் பூரண அருளைப் பெறுவதற்கான சிறந்த வழியாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories