Weekly Horoscope Oct 27 to Nov 2: கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு சங்கடங்கள் விலகி சந்தோஷம் பிறக்கும்!

Published : Oct 27, 2025, 11:30 AM IST

கன்னி ராசி நேயர்களுக்கு, குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்பட்டாலும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் திடீர் பணவரவும் எதிர்பார்க்கலாம். 

PREV
12
நீங்கள் கேட்ட உதவி கிடைக்கும்

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். தந்தைவழி உறவினர் களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடுவீர்கள். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு தொடர்புகொள்வர். பால்ய நண்பர்களை சந்திக்கும் சூழல் உருவாகும்.

22
உற்சாகமான சூழ்நிலை ஏற்படும்

அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப்பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கா மல் இருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். வாரப் பிற்பகுதியில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் சூழல் ஏற்படும். புதிய நண்பர்களால் புதிய தொழில்களை தொங்கும் நிலை ஏற்படும். திடீர் பணவரவு உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 27,30

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர் 

Read more Photos on
click me!

Recommended Stories