அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற சலுகைகளும் கிடைப்பதால் மனநிறைவு காணப்படும். உங்களது உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திட்டமிட்ட முறையில் செயல்பட்டால் வேலைகளில் சிறப்பாக முன்னேறுவீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் இப்போது புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். தற்போதைய நிலைமையைத் தொடர்வதே பாதுகாப்பானது. விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும் என்பதால் சிறிய முயற்சிகளிலும் நல்ல விளைவு காணலாம். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு இவ்வாரம் சிறிய சவால்கள் இருந்தாலும் பொறுமையுடன் நடந்து கொண்டால் அனைத்தும் சரியாகும். கணவருடன் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அதில் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 29, 31
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
வழிபட வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி