Weekly Horoscope - Oct 27 to Nov 02: கடக ராசி நேயர்களே, ஆதாயமும் எச்சரிக்கையும் நிறைந்த வாரம்! சொத்துக்கள் சேரும்.!

Published : Oct 27, 2025, 09:17 AM IST

இந்த வாரம் கடக ராசிக்கு புதிய முயற்சிகள் சாதகமாகும், தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகளுக்காக செலவுகள் ஏற்பட்டாலும், சகோதரர்கள் மூலம் பணவரவு மகிழ்ச்சி தரும். பணியிடத்தில் ஆதரவு இருந்தாலும்,மேலதிகாரிகளிடம் பணிவு தேவைப்படும்.

PREV
12
எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு

கடக ராசி நேயர்களே, இந்த வாரம் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்த காரியங்கள் அனுகூலமாக நிறைவேறும். தந்தை வழி உறவினர்களின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களால் வருமானம் அல்லது சொத்து சார்ந்த நன்மைகள் ஏற்படலாம். எதிரிகளால் முன்பே ஏற்பட்ட தொல்லைகள் இப்போது நீங்கி மனநிம்மதி நிலைக்கும். பிள்ளைகளுக்காக சில முக்கியமான செலவுகள் வரலாம்; அவர்களின் கல்வி, திருமணம் அல்லது ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் பணம் செலவிட வேண்டி இருக்கும்.

சகோதரர்கள் வழியாக திடீர் பணவரவு கிடைப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இருப்பினும் தந்தையுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் உருவாகலாம் என்பதால், பொறுமையாக பேசுவது நல்லது. அரசாங்க அலுவலர்களை அணுகும்போது மரியாதை மற்றும் அமைதியைப் பின்பற்றுவது வெற்றிக்குக் காரணமாகும். 

22
பணிவாக நடந்துகொள்வது மிகுந்த பலன் தரும்

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இவ்வாரம் நல்ல ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். சில திட்டங்களில் தாமதம் ஏற்பட்டாலும் வாரத்தின் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகை அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளிடம் பணிவாக நடந்துகொள்வது மிகுந்த பலன் தரும்.

வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் நீங்கள் அமைதியாக அணுகினால் அவை விரைவில் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்களுடன் உறவு ஏற்படும். பற்று வரவு விஷயங்களில் கவனமாக இருங்கள்; நம்பிக்கையால் பணம் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பொறுமையுடன் இருக்க வேண்டிய வாரம் இது. புகுந்த வீட்டினர் சில விஷயங்களில் கண்டிப்பாக நடந்தாலும், அவர்களை அனுசரித்துச் செல்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். வீட்டு சூழ்நிலையை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்கள்.

அதிர்ஷ்ட நாள்கள்: 27, 28 அதிர்ஷ்ட எண்கள்: 2, 3 வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

Read more Photos on
click me!

Recommended Stories