வேலை தொடர்பாக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் நிர்வாக ஆதரவும் அமையும். தொழிலில் லாபம் உயரும்; பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆனால் பணியாளர்களால் சிறு செலவுகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை கவனிக்கும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்தாலும், பொருளாதார நிலை சீராக இருக்கும். மன அமைதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: அக்டோபர் 29, நவம்பர் 1 அதிர்ஷ்ட எண்கள்: 2, 6 சந்திராஷ்டமம்: அக்டோபர் 27, 28 (இரவு வரை) வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்