மீன ராசி நேயர்களே, இந்த வாரம் சனி பகவானின் தாக்கம் இருப்பதால் பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். சில விஷயங்களில் தாமதங்கள் ஏற்படலாம். சவால்களை எதிர்கொள்ளும் பொழுது பயப்படாமல் உறுதியுடன் செயல்படுவது நன்மையைத் தரும். கடந்த கால ஏமாற்றங்கள் அல்லது மனக்கசப்புகளை விடுத்து புதிய திட்டங்களை வகுக்க நல்ல நேரம் ஆகும். எண்ணங்களில் தெளிவும், செயலில் உறுதியும் தேவை.
நிதி நிலைமை:
பண விஷயங்களில் திட்டமிடல் பாதுகாப்புக்கு உதவும். புதிய முதலீடுகளில் அவசரப்படாமல் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. பங்குகள், பத்திரங்கள் மற்றும் நிலையான வாய்ப்புகள் ஆகியவை சீரான வளர்ச்சிக்கு உதவும். சரியான நேரத்தில் திட்டமிட்ட முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்வதில் கவனம் செலுத்தவும்.
ஆரோக்கியம்:
உடல் நலத்தில் சிறிய அக்கறை தேவைப்படும். அதிகப்படிய உழைப்பை தவிர்க்க வேண்டும். போதுமான ஓய்வு மற்றும் தூக்கம் அவசியம். உணர்ச்சி ரீதியான சவால்கள் மன அழுத்தம் அல்லது அமைதியின்மையை ஏற்படுத்தலாம். எனவே மனதையும் உடலையும் பலப்படுத்தும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள். உணர்ச்சி சமநிலையை பராமரிப்பது முக்கியம்.
கல்வி:
கல்வியில் புதிய அறிவைப் பெறுவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பு வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்கள் பாதையை மாற்றி அமைக்கலாம். கவனச் சிதறல்களை தவிர்த்து படிப்பில் முழுமையாக ஈடுபடுவது வெற்றியைத் தரும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழிலில் உங்களுடை யோசனைகள் பலன்களைத் தரும். தடைகளை தாண்டுவதற்கு இந்த வாரம் சாதகமான வாய்ப்பு உள்ளது. கூட்டுப் பணி மூலம் முன்னேற்றத்தை காண்பீர்கள். சட்டம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் இணக்கமாக செல்வது நல்லது. வியாபாரத்தை விரிவு படுத்த புதிய யோசனைகள் தோன்றும். உங்கள் மனம் சொல்வதை கேட்டு முடிவெடுங்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் இணக்கம் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த வருத்தங்கள் நீங்கி அன்னோன்யம் அதிகரிக்கும். சில நேரங்களில் அமைதி குறைய வாய்ப்பு உள்ளது. எனவே மற்றவர்களுக்கும் இடம் கொடுத்து செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நேர்மறையான மற்றும் அமைதியான உரையாடல்கள் மூலம் தீர்வு காணுங்கள்.
பரிகாரம்:
தினமும் காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். சூரியனுக்கு நீர் அர்ப்பணித்து வழிபடவும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது ஞானத்தையும், நல்வாழ்வையும் தரும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்கள் படைத்து வழிபடலாம். ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு உதவுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)