மகர ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களின் படைப்புத்திறன் அதிகரிக்கும். புதிய யோசனைகள் மூலம் அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். பணியிடங்களில் கடந்த வாரம் அது இருந்த அதிக வேலைப்பளு, மன அழுத்தம் இந்த வாரம் குறையும். உங்கள் செயல்பாடுகளில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆணவத்தை தவிர்த்து அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும். வாழ்க்கையில் முன்னேற மற்றவரிடம் பேசும் பொழுது வார்த்தைகளை தேர்ந்தெடுத்துப் பேச வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
நீங்கள் இந்த வாரம் உங்கள் புதிய யோசனைகள் மூலம் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். இதன் காரணமாக அதிக நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வாரத்தின் தொடக்கத்தில் தொழில் சம்பந்தமான லாபம் அதிகரிக்கும். நிதி ரீதியாக சிந்தித்து செயல்படுவீர்கள். திட்டமிடப்படாத அவசர முதலீடுகளை தவிர்க்கவும். அனைத்து கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து முதலீடு செய்வது நஷ்டம் ஏற்படாமல் இருக்க தடுக்க உதவும்.
ஆரோக்கியம்:
கடந்த காலம் வேலை அழுத்தம் அல்லது அதிக வேலைப்பளு காரணமாக சோர்வாகவும், உடல்நிலை சரியில்லாமலும் உணரக்கூடும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தத்தில் இருந்து விடுபட முயற்சி செய்வீர்கள். இது உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும். இதயம் தொடர்பான நோய் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வி:
உயர் கல்விக்காக முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாய்ப்புகளை வழங்கும். சிறிய முயற்சி கூட பெரிய வெற்றியைத் தரும். கிடைக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் தொடர்பாக விரிவாக்கத்திற்கான முயற்சிகள் பலன் அளிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய யோசனைகளை செயல்படுத்தி வேலையை எளிதாக்குவீர்கள். புதிய பொறுப்புகள் அல்லது பதவிகள் தேடி வரக்கூடும். உங்கள் செயல்பாடு உங்கள் வாழ்க்கையின் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்கும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். எனவே அமைதியாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உறவுகளில் தெளிவின்மை இருக்கலாம். இருப்பினும் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இது மன மகிழ்ச்சி அளிக்கும். தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பரிகாரம்:
தினமும் ஓம் நமச்சிவாய என்கிற மந்திரத்தை 41 முறை உச்சரிப்பது நேர்மறை பலன்களை அதிகரிக்கும். சிவ வழிபாடு நன்மை தரும். சிவாலயங்களுக்கு சென்று வில்வ இலைகள் சாற்றி இறைவனை வழிபடலாம். இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவுவது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)