This Week Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியில் நடக்கப்போகும் செவ்வாய் பெயர்ச்சி.! புதிய உயரத்தை தொடப் போறீங்க.!

Published : Oct 26, 2025, 04:12 PM IST

This Week Rasi Palan: அக்டோபர் 27 முதல் நவம்பர் 02 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
வார ராசிப்பலன்கள் - விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் செவ்வாய் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதாலும், புதன் உங்கள் ராசியில் இருப்பதாலும் இந்த வாரம் முன்னேற்றங்கள் மற்றும் மாற்றத்தை காண இருக்கிறீர்கள். இந்த வாரம் ஆற்றல், தெளிவு, தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியைக் காண்பீர்கள். தாமதமான அல்லது தடைபட்ட காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். ஆரம்ப நாட்களில் மனதளவில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
 

நிதி நிலைமை:

இந்த வாரம் நிதி நிலைமை வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகக்கூடும். நீங்கள் ஏற்கனவே செய்திருந்த பழைய முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்னர் நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். வார இறுதியில் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. செவ்வாயின் ஆதிக்கத்தால் திடீர் பண வரவு இருந்தாலும், அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்:

வாரத்தின் ஆரம்பத்தில் உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆற்றல் அதிகமாக இருப்பதால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அதீத உழைப்பு அல்லது உணர்ச்சிவசப்படுவது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகா, தியானம் அல்லது ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

கல்வி:

மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும். செவ்வாய் மற்றும் புதனின் நிலை காரணமாக படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். குழுவாக படிப்பது அல்லது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதன் மூலம் இந்த வாரம் மேலும் சிறப்பானதாக மாறும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

இந்த வாரம் தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். புதிய வாடிக்கையாளர்கள் அல்லது ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு உங்கள் தொழிலுக்கு திருப்புமுனையாக அமையும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் வெற்றி பெறும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் சிறப்பான பாராட்டுகளைப் பெறுவீர்கள். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். வாரத்தின் மையப் பகுதியில் குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பீர்கள். இதன் காரணமாக அமைதியான சூழல் நிலவும். உறவினர்கள், நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடன் ஆக்கபூர்வமான விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் அல்லது துர்க்கை அம்மனை வழிபடுவது செவ்வாய் பகவானின் அனுகூலத்தை அதிகரிக்க உதவும். காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இந்த வாரம் பேச்சில் நிதானம் தேவை. கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எண்ணங்களையும், செயல்களையும் நிதானத்தோடு அணுகுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories