
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் சுபங்களை அள்ளித் தரும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 13 மாதங்கள் வரை சஞ்சரிப்பார். ஆனால் சில சமயங்களில் அவர் வழக்கத்தை விட வேகமாக நகர்கிறார். இந்த நிலைக்கு ‘அதிசார பெயர்ச்சி’ என்று பெயர். இந்த அரிய பெயர்ச்சியில் குரு பகவான் கடக ராசிக்குள் நுழைந்திருக்கிறார். அக்டோபர் 18 இரவு 9:39 மணிக்கு தொடங்கிய இந்த அதிசார சஞ்சாரம் நவம்பர் 11, 2025 வரை நீடித்து பின்னர் டிசம்பர் 3 ஆம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புவார்.
கடக ராசியானது குரு பகவானின் உச்ச வீடாக கருதப்படுகிறது. உச்ச வீட்டில் ஒரு கிரகம் சஞ்சரிக்கும் பொழுது அதன் சுப பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கிறது குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியானது குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்வில் மகத்தான முன்னேற்றத்தைக் கொடுக்கும். நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவு, புகழ் மற்றும் வெற்றி கிடைத்து வாழ்க்கை செழிக்கும். டிசம்பர் வரை வெற்றி பெற போகும் நான்கு ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடக ராசியின் ஆறு மற்றும் ஒன்பதாம் வீடுகளின் அதிபதியாக விளங்கும் குருபகவான் முதல் வீடான லக்னத்திலேயே உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு தனது உச்ச ராசியான கடகத்தில் சஞ்சரிப்பதால் இந்த அதிசார காலம் உங்களுக்கு மிகவும் மங்களகரமான, நேர்மறையான பலன்களை அள்ளித் தரும். புதிய லாப வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உயரத்தை தொடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத் திறன் மேம்படும். சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு கிடைக்கும். ஒன்பதாம் வீட்டின் அதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவதால் தந்தையின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
குரு ரிஷப ராசியின் 8 மற்றும் 11 ஆம் வீடுகளின் அதிபதியாக இருந்து வருகிறார். அவர் தற்போது மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு பகவானின் இந்த சஞ்சாரம் காரணமாக உங்கள் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். நிதி நிலைமை வலுப்பெறும். எதிர்பார்க்கும் பண ஆதாயங்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளும் வேகமாக முடிவடையும். உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றியைப் பெறுவீர்கள்.
கன்னி ராசிக்காரர்களின் 4 மற்றும் 7 வீடுகளின் அதிபதியாக இருக்கும் குரு பகவான் தற்போது லாப ஸ்தானமான 11 வது வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் காலம் இது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் தொடர்பான சுப செய்திகள் வந்து சேரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு, மனை தொடர்பான விவகாரங்களில் வெற்றி கிடைத்து சுகபோகங்கள் கூடும்.
கும்ப ராசியின் 2 மற்றும் 11 ஆம் வீடுகளின் அதிபதியாக விளங்கும் குரு பகவான் ஆறாம் வீட்டின் வழியாக பெயர்ச்சி அடைந்திருக்கிறார். ஆறாம் வீடு சுபமாக கருதப்படாத இடம் என்றாலும் குரு லாபம் மற்றும் தன வீடுகளின் அதிபதியாக இருப்பதால் இந்த அதிசார பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை நிச்சயம் அளிக்கும். உங்கள் பொருள், வசதிகள் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபத்தைப் பெறுவீர்கள். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறும் ஆற்றல் கிடைக்கும். தொழிலில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களின் சதிகளை முறியடித்து வெற்றியை ஈட்டுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)