Astrology: சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் எது தெரியுமா? இவங்களுக்கு செல்வதை அள்ளி அள்ளி கொடுப்பாராம்.! உங்க ராசி இருக்கா?

Published : Oct 26, 2025, 01:32 PM IST

Lord Surya Favorite Zodiac Signs: ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் சூரிய பகவானுக்கு விருப்பமான அல்லது நெருக்கமான ராசிகள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
சூரிய பகவானுக்கு விருப்பமான ராசிகள்

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளையும் ஒவ்வொரு கிரகங்கள் ஆள்கிறது. இந்த கிரகங்கள் அந்தந்த ராசிகளுக்கு பலன்களையும், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் அளிக்கின்றன. அந்த வகையில் சூரிய பகவானுக்கு மிகவும் நெருக்கமான அல்லது விருப்பமான ராசிகள் என்று சில ராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சூரிய பகவான் அதிபதியாக விளங்கும் ராசிகள், உச்சம் பெறும் ராசிகள், நீச்சம் பெறும் ராசிகள், பலவீனமான ராசிகள் ஆகியவை அடங்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
சிம்மம்

சிம்ம ராசியானது சூரியனின் ஆட்சி வீடாக கருதப்படுகிறது. இது சூரியனின் சொந்த வீடாகும். இந்த ராசியில் சூரியன் இருக்கும் பொழுது மிகுந்த பலத்துடனும், அதிகாரத்துடனும் விளங்குவார். இந்த ராசிக்காரர்களுக்கு ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு ஆகியவை அதிகமாக இருக்கும். சூரியன் எவ்வாறு மையமாகவும், பிரகாசமாகவும் இருக்கிறாரோ அதேபோல் சிம்ம ராசிக்காரர்களும் இயற்கையிலேயே ஆளுமைத் திறனும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவார்கள். இவர்கள் தங்களின் தாராள குணம், பெருந்தன்மை, உத்வேகம் அளிக்கும் திறன் ஆகியவற்றின் மூலம் சூரியனின் நல்ல அம்சங்களை பிரதிபலிக்கிறார்கள்.

36
மேஷம்

மேஷ ராசியானது செவ்வாய் பகவான் உச்சம் பெறும் ராசியாகும். இது சூரியனுக்கு மிகவும் நட்பு ராசியாகவும் விளங்குகிறது. மேஷம் நெருப்பு ராசி என்பதால் இங்கு சூரியனின் ஆற்றல் பெருகி அவர் முழுமையான பலத்தைப் பெறுகிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு தைரியம், சுறுசுறுப்பு, வெற்றி பெறும் குணம் ஆகியவற்றையும் சூரிய பகவான் அளிக்கிறார். சூரியன் மேஷ ராசிக்கு வரும் பொழுது அவர் தனது முழுமையான வலிமையையும், நேர்மறை ஆற்றலையும் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. மேலும் சூரிய பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றி பெறும் உத்வேகத்தையும், சவால்களை நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல்களையும் வழங்குகிறார்.

46
தனுசு

ஜோதிடத்தின் படி தனுசு ராசியும் சூரிய பகவானுக்கு விருப்பமான ராசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ராசி நெருப்புக் கூறுடைய ராசி என்பதாலும், ஞானத்தின் அதிபதியாக விளங்கும் குருவின் ஆதிக்கத்தில் இருப்பதாலும் இங்கு சூரியன் நேர்மறை ஆற்றலை பெறுகிறது. மேலும் குருபகவானும் சூரியனும் நட்பு கிரகம் என்பதால் இந்த ராசியில் சூரியன் இருக்கும் பொழுது நல்ல பலன்களை அளிக்கிறார். குறிப்பாக தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீகம், கல்வி, அறிவு, தத்துவம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை சூரிய பகவான் வழங்குகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் நம்பிக்கை, நேர்மறை எண்ணங்கள், சாகச குணம், ஞானத்தைத் தேடும் ஆர்வத்தையும் அளிக்கிறார்.

56
சூரியன் நீச்சம் பெறும் ராசிகள்

சூரியன் நீச்சம் பெறும் ராசியாக துலாம் ராசி அறியப்படுகிறது. நீச்சம் என்பது ஒரு கிரகம் தனது பலத்தை முழுமையாக இழந்து, பலவீனமாக இருக்கும் நிலையாகும். துலாம் ராசி சுக்கிரனின் வீடு ஆகும். மேலும் இது காற்று மற்றும் சமநிலையைக் குறிக்கும் ராசியாகும். அதிகாரத்தை குறிக்கும் சூரியனுக்கு சமநிலை ராசியான துலாம் பலவீனமான இடமாகிறது. துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது ஜாதகக்காரர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு, தந்தை வழியில் சிரமங்கள், கண் கோளாறுகள், சோர்வு, தலைமைப் பண்பில் பின்னடைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

66
சூரியனுக்கு பகை ராசிகள்

சூரியன் பலவீனமாக இருக்கும் ராசிகள் மட்டுமல்லாமல் சில பகை ராசிகளும் இருக்கின்றன. இந்த பகை வீடுகளில் இருக்கும் பொழுது சூரிய பகவான் பலவீனமான பலன்களையே தருகிறார். சனி பகவான் சூரியனுக்கு பகை கிரகமாக அறியப்படுகிறார். சனிபகவான் ஆளும் மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது அவரது ஆற்றல் தடைபடுகிறது. இது தொழில், கௌரவம் மற்றும் அதிகாரத்தில் சவால்களைக் கொண்டு வரும். அதே போல் சுக்கிரனும் சூரியனுக்கு பகை கிரகமாக அறியப்படுகிறார். சுக்கிரன் ஆளும் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளில் சூரியன் இருக்கும் பொழுது பண விஷயங்கள், சுக போகங்கள், உறவுகளில் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories