அக்டோபர் 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக உருவாகும் ருச்சக ராஜயோகம் சில ராசிகளுக்கு நன்மைகளை வாரி வழங்க இருக்கிறது.
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் தைரியம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, ஆற்றல், வீரம், துணிச்சல், நிலம், சகோதர உறவுகள் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு அக்டோபர் 27ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் தனது சொந்த ராசிகளான மேஷம் அல்லது விருச்சிகத்தில் இருக்கும் பொழுதோ அல்லது உச்ச ராசியான மகரத்தில் இருக்கும் போதோ அல்லது கேந்திர ஸ்தானங்களில் (1,4,710) வீடுகளில் அமைந்திருந்தால் ருச்சக ராஜயோகம் உருவாகிறது. இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும்.
25
ருச்சக ராஜயோகத்தின் சிறப்பம்சங்கள்
இந்த யோகமானது ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் பொழுது தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும். தொழில் மற்றும் வேலையில் தலைமைப் பண்புகள் தேடி வரும். எதிர்ப்புகளை முறியடித்து வெற்றிகளை அடைய முடியும். செவ்வாய் பூமியின் காரகன் என்பதால் புதிய வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் வலிமை, சுறுசுறுப்பு மேம்படும். நீண்ட கால நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். புதிய முயற்சிகள் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
35
விருச்சிகம்
ருச்சக ராஜயோகத்தால் அதிக பலன் பெறும் ராசிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். செவ்வாய் உங்கள் ராசி மற்றும் லக்ன வீட்டில் சஞ்சரித்து இந்த யோகத்தை ஏற்படுத்துவதால் இது ‘லக்ன ருச்சக ராஜயோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ராஜயோகம் டிசம்பர் 7 ஆம் தேதி வரை நீடிக்க இருக்கிறது. இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவீர்கள்.
உங்களின் தன்னம்பிக்கை அபரிமிதமாக அதிகரிக்கும். ஆளுமைத் திறன் மேம்படும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். கௌரவம் அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுன ராசிக்காரர்களின் ஆறாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் இந்த யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வழங்கும். ஆறாம் வீடு என்பது கடன், நோய், எதிர்ப்புகளை குறிக்கும் இடமாகும். ருச்சக யோகம் 3வது வீட்டில் உருவாவதன் காரணமாக நீண்ட காலமாக நிலவி வந்த கடன் பிரச்சனைகள், நிதி சார்ந்த பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி உண்டாகும். தீர்க்க முடியாமல் இருந்த கடினமான காரியங்களை எளிதில் முடித்துக் காட்டுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம், வேலை மாறுதல் மற்றும் நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இருக்கும்.
55
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மூன்றாவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. மூன்றாவது வீடு என்பது வீரம், தைரியம், இளைய சகோதரர்களை குறிக்கும். இந்த ராஜயோகம் காரணமாக சகோதரர்களிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிணைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அபரிமிதமாக உயரும். மனதில் எதிர்பாராத ஆறுதல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கவும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடையவும் சாதகமான சூழல் நிலவும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)