This Week Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் பண மழை கூரையை பிச்சிட்டு கொட்டப்போகுது.! தயாரா இருங்க.!

Published : Oct 26, 2025, 05:13 PM IST

This Week Rasi Palan: அக்டோபர் 27 முதல் நவம்பர் 02 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
வார ராசிப்பலன்கள் - கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் சூரியன், செவ்வாய், ராகு போன்ற கிரகங்களின் நிலைகள் காரணமாக இந்த வாரம் கலவையான பலன்களே கிடைக்கும். ஆளுமை அதிகரிக்கும். புதுமையான சிந்தனைகள் உருவாகும். தனிப்பட்ட இலக்குகள் குறித்து சிந்திப்பதற்கு உகந்த வாரமாகும். புதிய திசையை நோக்கி நகரும் உணர்வு இருக்கும். உங்கள் உள்மனது சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள். சவால்களை நிதானத்துடனும், கூர்மையுடனும் அணுகுவது தீர்வு காண உதவும்.
 

நிதி நிலைமை:

நிதி நிலைமை பொதுவாக சாதகமானதாக இருக்கும். நிதி ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கலாம். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது. வாரத்தின் பிற்பகுதியில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எனவே நிதி திட்டமிடல் செய்ய வேண்டியது அவசியம். சந்தை வீழ்ச்சி அடையும் என்பதால் முதலீடுகள் செய்வதற்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஆரோக்கியம்:

உடல் நலனை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செரிமானம் தொடர்பான சிறிய பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படுங்கள். உணர்ச்சிப் பூர்வமான தருணங்கள் அல்லது ஓய்வின்மை மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே சுய அக்கறைக்கு முன்னுரிமை கொடுங்கள். போதுமான ஓய்வு, சத்தான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

கல்வி:

மாணவர்களுக்கு புதிய துறைகளை ஆராய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்கள் அல்லது உறவுகளை சந்திப்பது கல்வியுடன் தொடர்புடைய பலன்களைத் தரலாம். குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

தொழில் ரீதியான பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. வணிக விரிவாக்கத்திற்கான புதிய யோசனைகள் உதிக்கக்கூடும். உங்கள் உள் உணர்வை நம்புங்கள். பணியிடத்தில் சில சவால்கள் ஏற்படலாம். ஆனால் அதை நிதானத்துடன் சமாளிப்பீர்கள். உங்கள் அர்ப்பணிப்புக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் நிலையான வெற்றி கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

குடும்ப வாழ்க்கையில் நல்லிணக்கம் ஏற்படும். பழைய குடும்பப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. நெருங்கிய உறவுகள் ஆழமடையும். உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவது உறவை வலுப்படுத்தும். உறவுகளில் தவறான புரிதல்கள் வந்து போகலாம். எனவே பொறுமை மற்றும் அமைதியான உரையாடல் அவசியம்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை வழிபடுவது நல்லது. ராகு பகவானுக்கு உரிய மந்திரங்களை ஜெபிப்பது பொருளாதார நிலையை மேம்படுத்த உதவும். இயன்றவர்கள் சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories