Astrology: வக்ர நிலையை அடைந்த குரு பகவான்.! இந்த 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்.!

Published : Nov 11, 2025, 02:32 PM IST

Guru Vakri 2025: நவம்பர் 11 ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் வக்ரமாகி பின்னோக்கி செல்லும் பயணத்தை துவங்குகிறார். இது சில ராசிகளுக்கு எதிர்மறை பலன்களை வழங்கக்கூடும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
குரு வக்ர பெயர்ச்சி 2025

வேத ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். அவர் இந்த வருடம் கடக ராசியில் வக்ரமாக பின்னோக்கி சஞ்சரித்து, பின்னர் மீண்டும் மிதுன ராசிக்கு செல்கிறார். கடக ராசிக்கு செல்லும் குரு மார்ச் 11,2026 வரை அதே நிலையில் இருப்பார். குரு பகவான் வக்ர நிலையை அடைவது என்பது மங்களகரமானதாக கருதப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மேஷம்

குரு பகவான் உங்கள் ராசியின் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் வக்ரம் பெறுகிறார். இந்த இடமானது வீடு, தாயார், வாகனம், மன நிம்மதி ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். குரு வக்ர நிலையை அடைவது வீட்டுச் சூழல், தாயாரின் ஆரோக்கியம், மன நிம்மதி ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சொத்துக்கள் வாங்குவது அல்லது விற்பது போன்றவற்றில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்படலாம். தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மன அமைதியை குறைக்கும் விஷயங்களை எதிர்கொள்ள நேரிடலாம். வாகனங்களில் செல்லும் பொழுதும், பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை.

34
மிதுனம்

மிதுன ராசியின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் குரு வக்ரம் ஆகிறார். எனவே நிதி விஷயங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண விஷயங்களில் கண்மூடித்தனமாக முடிவுகளை எடுக்கக் கூடாது. குடும்ப உறவுகளிடம் பேசும் பொழுது பேச்சில் நிதானம் தேவை. வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளின் போது எந்த அதிக கவனத்துடன் எடுக்க வேண்டும். நிதி மற்றும் உறவு சார்ந்த முடிவுகளை குரு நேர்கதிக்கு திரும்பும் வரை (மார்ச் 11, 2026) தள்ளிப் போடுவது நல்லது.

44
கடகம்

குரு உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று வக்ரமடைவது மிக முக்கிய மாற்றங்களை குறிக்கிறது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படலாம். குறிப்பாக மார்பு, வயிறு சார்ந்த பிரச்சனைகள் வரலாம். இந்த காலகட்டத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளில் தெளிவுடன் இருக்க வேண்டும். குடும்ப விஷயங்களை சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையலாம். இதன் காரணமாக மனக் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேவையற்ற விஷயங்களில் அதிக உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories