தனுசுவை போல மீன ராசியும் குரு பகவானின் சொந்த ராசியாகும். இது குருவின் நீர் ராசி என்பதால் இவர்களுக்கு இரக்க குணமும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் அதிகமாக இருக்கும். மீன ராசிக்காரர்களுக்கு ஆழ்மன சிந்தனை கற்பனைத் திறன் அதிகம். குருவின் ஆதிக்கத்தால் இவர்கள் சமுதாயத்தில் பெரும் மதிப்பையும், மரியாதையும் பெறுவார்கள். பொதுவாக இவர்களுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டங்கள் வராது.
குரு பகவானின் அருளைப் பெற வழிகள்
குரு பகவானின் அருளைப் பெற வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யலாம். கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம். மஞ்சள் நிற உணவுகளான கடலைப்பருப்பு சுண்டல், எலுமிச்சை பழ சாதம் போன்றவற்றை தானம் செய்யலாம். ஏழை எளியவர்கள், இயலாதவர்கள், ஏழை மாணவர்களுக்கு உதவுவது குரு பகவானின் அருளைப் பெற்றுத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)