இந்து மதத்தில் எண் கணிதத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. எண் கணிதம் என்பது ஒருவருடைய பிறந்த தேதி, கிழமை, மாதம் வைத்து அவரின் ஆளுமை, குணநலன்கள், எதிர்காலம் பற்றி சொல்லிவிட முடியும். அந்த வகையில், ஒரு சில குறிப்பிட்ட செய்திகளில் பிறந்த பெண்கள் தங்களது வாழ்க்கை துணையை உருகி உருகி காதலிப்பார்களாம் என்று என் கணித நிபுணர்கள் சொல்லுகின்றனர். அவர்கள் தங்கள் துணை மீது அதிக காதல் கொண்டவர்களாக இருப்பார்களாம். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்களாம். சரி இப்போது எந்த தேதியில் பிறந்த பெண்களிடம் இந்தக் குணநலன்கள் இருக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
எண் 4
எண் கணிதத்தின் படி, 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் எண் 4 இன் கீழ் வருவார்கள். இந்த எண் ராகுவுடன் தொடர்புடையது. இந்த எண்ணின் கீழ் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலியாக இருப்பார்களாம். இந்த எண்ணிற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி உண்டாம்.
35
கோபக்காரர்கள்
எண் கணிதத்தின் படி, மேலே சொன்ன 4 தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகமாக கோபப்படுவார்களாம். இவர்களிடம் இருக்கும் இந்த கோபம் சில சமயங்களில் பிரச்சனையை உண்டாக்கிவிடும். சில நேரங்களில் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட அதிகமாக கோபப்படுவார்களாம். ஆனால் ரொம்பவே நல்லவர்களாம்.
எண் கணிதத்தின் படி, எண் 4 இன் கீழ் உள்ள பெண்கள் தங்கள் துணையை உருகி உருகி காதலிப்பார்களாம். அவர்கள் தங்கள் துணை தொடர்பான ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்துவார்களாம். தங்கள் துணைக்காக எந்த ஒரு காரியத்தையும் செய்ய தயங்க மாட்டார்களாம். ஆனால் தங்கள் துணை ஏமாற்றினால் அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பிரிந்து போக கூட தயங்க மாட்டார்கள்.
55
எதிர்காலம் எப்படி இருக்கும்?
எண் கணிதத்தின் படி, எண் 4 இன் கீழ் வரும் பெண்கள் ரொம்பவே கடின உழைப்பாளிகள். இவர்களது கடின உழைப்பால் வாழ்க்கையில் வெற்றியை காண்பார்கள். இவர்கள் தங்களது வேலையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்களது இலக்குகளை அறிய கடினமாக உழைப்பார்களாம்.