Astrology: ஜூலை 19, இன்றைய ராசி பலன்கள்! பலருக்கு வெற்றிக்கனி! சிலருக்கு கையில் Money!

Published : Jul 19, 2025, 12:30 AM IST

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட எண், வழிபாடு, நிறம் மற்றும் பரிகாரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

PREV
112
மேஷம் (Mesham - Aries)

அடுத்தவருக்கு உதவி செய்வதையே தொழிலாக கொண்ட உங்களுக்கு இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும், ஆனால் கோபத்தை கட்டுப்படுத்தவும். வேலையில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி மேம்பாட்டிற்கு ஏழைகளுக்கு உணவு தானம் செய்யவும். துர்கை அம்மனை வழிபடுவது நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்: 9 | வழிபாடு: துர்கை அம்மன் | கலர்: சிவப்பு | பரிகாரம்: உணவு தானம்.

212
ரிஷபம் (Rishabam - Taurus)

அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணம் உடைய உங்களுக்கு பணியிடத்தில் சவால்கள் வரலாம், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதியை பேணுவது முக்கியம். மன அழுத்தத்தை தவிர்க்கவும். விநாயகர் வழிபாடு மனதை அமைதிப்படுத்தும். கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகளை தானம் செய்யவும்.

அதிர்ஷ்ட எண்: 6 | வழிபாடு: விநாயகர் | கலர்: மஞ்சள் | பரிகாரம்: ஆடை தானம்.

312
மிதுனம் (Mithunam - Gemini)

எல்லோரிடமும் அன்பு செலுத்தும் உங்களுக்கு இன்று தனிப்பட்ட பிரச்சினைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். பயணங்களில் கவனமாக இருக்கவும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். முருகன் வழிபாடு நம்பிக்கையை வளர்க்கும். மருத்துவமனைகளுக்கு உதவி செய்வது புண்ணியத்தை பெருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 3 | வழிபாடு: முருகன் | கலர்: பச்சை | பரிகாரம்: மருத்துவ உதவி.

412
கடகம் (Kadagam - Cancer)

உண்மையின் பக்கம் மட்டுமே நிற்கும் உங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வணிகத்தில் நிதி ஆதாயம் கிடைக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். சிவபெருமான் வழிபாடு மன அமைதியை தரும். கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவது நற்பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2 | வழிபாடு: சிவபெருமான் | கலர்: வெள்ளை | பரிகாரம்: கர்ப்பிணிகளுக்கு உதவி.

512
சிம்மம் (Simmam - Leo)

எல்லோரையும் வழிநடத்தி செல்லும் திறமையுடைய உங்களுக்கு இன்று எல்லா முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் மன அமைதியை தரும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆஞ்சநேயர் வழிபாடு தடைகளை நீக்கும். பெற்றோருக்கு உதவி செய்வது புண்ணியத்தை பெருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1 | வழிபாடு: ஆஞ்சநேயர் | கலர்: ஆரஞ்சு | பரிகாரம்: பெற்றோருக்கு உதவி.

612
கன்னி (Kanni -Virgo)

எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். உறவினர்களுடன் கவனமாக பேசவும். விஷ்ணு வழிபாடு செல்வத்தை பெருக்கும். பசுமாட்டிற்கு உணவு அளிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்: 5 | வழிபாடு: விஷ்ணு | கலர்: பச்சை | பரிகாரம்: பசுமாட்டிற்கு உணவு.

712
துலாம் (Thulam - Libra)

எப்போதும் நீதியின் பக்கம் நிற்கும் உங்களுக்கு இன்று வருமானத்தில் முன்னேற்றம் உண்டு. துணைவரின் உடல்நலத்தில் கவனம் தேவை. முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்கவும். லட்சுமி வழிபாடு செல்வத்தை பெருக்கும். கோயிலில் எண்ணெய் தீபம் ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்: 6 | வழிபாடு: லட்சுமி | கலர்: மஞ்சள் | பரிகாரம்: எண்ணெய் தீபம்.

812
விருச்சிகம் (Viruchigam - Scorpio)

உழைப்பை மட்டும் நம்பும் உங்களுக்கு இன்று வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.  நண்பர்கள் உறவினர்களிடத்தில் நற்பெயர் கிடைக்கும். ஆலோசனைகளை கவனமாக பின்பற்றவும். குலதெய்வ வழிபாடு தடைகளை நீக்கும். ஏழைகளுக்கு ஆடைகள் தானம் செய்யவும்.

அதிர்ஷ்ட எண்: 9 | வழிபாடு: குலதெய்வம் | கலர்: சிவப்பு | பரிகாரம்: ஆடை தானம்.

912
தனுசு (Dhanusu - Sagittarius)

இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி அடையும் வலியுமையுள்ள உங்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. உறவுகள் மேம்படும். குரு பகவான் வழிபாடு வெற்றியை தரும். கோயிலில் அன்னதானம் செய்யவும்.

அதிர்ஷ்ட எண்: 3 | வழிபாடு: குரு பகவான் | கலர்: ப்ரவுன் | பரிகாரம்: அன்னதானம்.

1012
மகரம் (Magaram - Capricorn)

நேர்மையின் பக்கம் நிற்கும் உங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகலாம். உறவினர்களுடன் நல்லிணக்கம் இருக்கும். சனி பகவான் வழிபாடு தடைகளை நீக்கும். எள் தீபம் ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்: 8 | வழிபாடு: சனி பகவான் | கலர்: நீலம் | பரிகாரம்: எள் தீபம்.

1112
கும்பம் (Kumbam - Aquarius)

எதிரிகளைகூட மன்னித்து உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட உங்களுக்கு இன்று தெய்வ வழிபாடு வெற்றியை பெற்றுத்தரும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் வரலாம். பணியிடத்தில் கவனம் தேவை. மன அழுத்தத்தை தவிர்க்கவும். சிவபெருமான் வழிபாடு அமைதியை தரும். மருத்துவமனைகளுக்கு நிதி உதவி செய்யவும்.

அதிர்ஷ்ட எண்: 4 | வழிபாடு: சிவபெருமான் | கலர்: கருப்பு | பரிகாரம்: மருத்துவ உதவி.

1212
மீனம் (Meenam - Pisces)

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்ட உங்களுக்கு இன்று புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. மன அழுத்தத்தை தவிர்க்கவும். விஷ்ணு வழிபாடு செல்வத்தை பெருக்கும். அன்னதானம் செய்வது மன அமைதியை தரும்.

அதிர்ஷ்ட எண்: 7 | வழிபாடு: விஷ்ணு | கலர்: சிவப்பு | பரிகாரம்: அன்னதானம்.

Read more Photos on
click me!

Recommended Stories