Sani Vakra Peyarchi : வக்ர சனியின் பிடியில் சிக்கிய 3 ராசிகள் – இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; தீபாவளி வரை என்ன நடக்கும்?

Published : Jul 18, 2025, 10:10 PM IST

Saturn Retrograde 2025 Palan in Tamil : மீன ராசியில் சனி பகவான் வக்ர கதியில் பயணிக்க தொடங்கிய நிலையில் சனியின் இந்த வக்ர கதியால் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டிய டாப் 3 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.

PREV
15
வக்ர சனியின் பிடியில் சிக்கிய 3 ராசிகள்

Saturn Retrograde 2025 Palan in Tamil : ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவார். திரும்ப 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் அந்த ராசிக்கு வருவார். இந்த சூழலில் சுப யோக ராஜயோகம் உருவாகிறது. இதே போன்று சனி வக்ர கதியில் பயணிக்கும் நிலையில் விபரீத ராஜயோகமும், கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகியிருக்கிறது.

25
சனி வக்ர பெயர்ச்சி 2025 பலன்

இது செல்வ செழிப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை குறிக்கிறது. மீன ராசியில் சனி பகவான் 138 நாட்கள் வக்ர கதியில் இருப்பார். அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைவார். கடந்த 13, ஆம் தேதி காலை 7:24 மணிக்கு மீன ராசியில் வக்ரம் அடைந்த சனி பகவான் மீண்டும் நவம்பர் 28, 2025 அன்று காலை 7:26 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைவார். சனி பகவானின் வக்ர நிலை இந்த 3 ராசியினருக்கு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ராசியினர் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

35
மேஷ ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி 2025 பலன்:

மேஷ ராசிக்கு சனி பகவான் 10 மற்றும் 11 ஆம் வீடுகளுக்கு அதிபதி ஆவார். இந்த பெயர்ச்சியின் போது சனி உங்கள் 12 ஆம் வீட்டிற்குள் (விரய ஸ்தானம்) வக்ர கதியில் நுழைந்துள்ளார். இதன் காரணமாக இனி வரும் 4 மாதங்களும் உங்களுக்கு வருமானத்தை விட செலவுகள் தான் அதிகமாகவே இருக்கும். இனி வரும் காலங்களில் நீங்கள் செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

அலைச்சல் அதிகளவில் இருக்கும். தேவையற்ற எண்ணங்கள் மேலோங்கும். வெளியூர், வெளிநாடும் செல்லும் வாய்ப்புகளும் உங்களுக்கு தேடி வரும். பேசும் வார்த்தைகளில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் மேஷ ராசிக்கு இது ஏழரை காலம். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகமாகவே இருக்கும். 

இதற்கு பரிகாரமாக சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்ய வேண்டும். புதன்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

45
மிதுன ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி 2025 பலன்:

மிதுன ராசிக்காரர்கள் சனியின் வக்ரகதியால் தங்கள் தொழில் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். அங்கீகாரம் இல்லாமல் சிறப்பாக செயல்பட உங்கள் மீது அதிக அழுத்தம் இருக்கும். உங்கள் வெற்றி குறையாது, ஆனால் நீங்கள் எப்படி முதிர்ச்சியுடன் செயல்பட முடியும் என்பதை நீங்கள் கணக்கிட வேண்டும். மிதுன ராசியின் 10 ஆம் வீட்டில் சனி வக்ரகதியில் உள்ளார். வேலையில் குறுக்குவழிகளைப் பயன்படுத்த வேண்டாம். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். சனி குறிப்பாக உங்கள் நீண்டகால இலக்குகள் மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கும்.

55
சிம்ம ராசிக்கான சனி வக்ர பெயர்ச்சி 2025 பலன்:

சனி பகவான் சிம்ம ராசிக்கு 6 மற்றும் 7ஆம் இடங்களுக்கு அதிபதி. அவர் இப்போது சிம்ம ராசிக்கு 8ஆவது இடமான அஷ்டம ஸ்தானத்தில் வக்ர கதி அடைந்துள்ளார். அஷ்டமத்து சனி காலம் சவால்கள், போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்க சூழல் இருந்தாலும் வண்டி, வாகனம், ஆடை, ஆபரணங்கள், புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பண வரவுக்கும் வாய்ப்பு உண்டாகும். முக்கியமாக கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories