Zodiac Signs : 30 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் நவபஞ்சம யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.!

Published : Jul 18, 2025, 03:50 PM IST

நவபஞ்சம யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் படி சுபமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நவபஞ்சம யோகம் உருவாக உள்ளது. இதனால் பலன் பெறும் 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
30 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் நவபஞ்சம யோகம்

நவபஞ்சம யோகம் என்பது இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளில் அமைந்திருக்கும் பொழுது உருவாகிறது. இந்த அமைப்பு திரிகோண அமைப்பு என அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் ஐந்தாம் வீடு பூர்வ புண்ணியம், குழந்தைகள், புத்தி, அதிர்ஷ்டம் ஆகியவற்றையும், ஒன்பதாம் வீடு தர்மம், ஆன்மீகம், உயர்கல்வி ஆகியவற்றையும் குறிக்கின்றன. இந்த வீடுகளுக்குள் கிரகங்கள் தொடர்பு கொள்ளும் பொழுது சாதகமான பலன்கள் உண்டாகிறது. நவபஞ்ச யோகம் சுப கிரகங்களால் ஏற்படும் பொழுது ஒருவருக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம், செல்வம், சமூக அங்கீகாரம், வளர்ச்சி ஆகியவை கிடைக்கிறது. இந்த யோகம் ஏற்படும் காலத்தில் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இது மகாராஜா யோகம் போல் செயல்படக்கூடியது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

25
நவபஞ்சம யோகத்தை உருவாக்கும் கிரகங்கள்

குருபகவான் தற்போது மிதுன ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். இவர் கடக ராசிக்கு அக்டோபர் மாதம் செல்ல உள்ளார். மறுபுறம் சனி பகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். அக்டோபரில் குரு பெயர்ச்சியின் போது சனி மற்றும் குருவின் நிலைகளால் நவபஞ்சம ராஜ யோகம் உருவாக உள்ளது. இது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உருவாகிறது. இந்த ராஜயோகம் உருவாவதால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட உள்ளது. குறிப்பாக சில ராசிக்காரர்கள் திடீர் செல்வத்தையும், முன்னேற்றத்தையும் அடைய உள்ளனர். வெளிநாடு வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்க உள்ளது. குறிப்பிட்ட ராசிக்காரர்களை தவிர மற்ற ராசிக்காரர்களுக்கும் இந்த யோகத்தால் பலன்கள் உண்டாக உள்ளது.

35
நீண்ட கால பலன்களைத் தரும் கிரகங்களின் சஞ்சாரம்

2025 ஆம் ஆண்டில் சனி மற்றும் குரு போன்ற பெரிய கிரகங்களின் சஞ்சாரம் இந்த யோகத்தில் பெரும் பங்கு வகிக்க உள்ளது. இந்த கிரகங்கள் நீண்ட காலம் ஒரு ராசியில் தங்குவதால் அவை உருவாக்கும் நவபஞ்ச யோகம் நீண்ட காலத்திற்கு பலன்களை தர உள்ளன. குறிப்பிட்ட கிரகங்களின் சஞ்சாரத்தை பொறுத்து எந்தெந்த மாதங்களில் இந்த யோகம் அமைகிறது என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களும் நல்ல நிலையில் இந்த யோகத்தை உருவாக்கும் பொழுது நேர்மையான மாற்றங்கள் நிகழ்கிறது. 2025ல் குரு ஒரு ராசியில் இருந்து ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளை பார்க்கும் பொழுது அந்த ராசிகளுக்கு சுப பலன்களை அள்ளிக் கொடுப்பார். சனி, ராகு, கேது போன்ற கிரகங்களும் இந்த யோகத்தில் இணையும் பொழுது அதற்கு ஏற்ற பலன்கள் அமையும்.

45
நவபஞ்சம யோகத்தால் பலனடையும் ராசிகள்

நவபஞ்சம யோகத்தால் பலனடையும் ராசிகள் மேஷம், சிம்மம், தனுசு மற்றும் மீனம். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நிதி நிலைமையை மேம்படுத்தும். புதிய வாய்ப்புகள், முதலீடுகள் மூலமாக லாபம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகத்தால் சமூகத்தில் அங்கீகாரம், பதவி உயர்வு, புதிய தொழில்கள் உண்டாகும் வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் கூடி வரும். குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் உயர்கல்வி, ஆராய்ச்சி, வெளிநாட்டு பயணம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தும். மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நிதி ரீதியாக சாதகமாக அமையும். எதிர்பாராத பண வரவு, முதலீடுகளில் லாபம், குடும்ப உறவுகளில் நல்லிணக்கமும் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் மிதுனம், துலாம் போன்ற ராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

55
நவபஞ்சம யோகத்தால் கிடைக்கும் நன்மைகள்

நவபஞ்சம யோகத்தால் எதிர்பாராத பணவரவு, முதலீடுகளில் லாபம், புதிய வருமான ஆதாரங்கள், புதிய வேலைவாய்ப்புகள், தொழிலில் வளர்ச்சி, சமூகத்தில் நல்ல பெயர், பதவி உயர்வு, திருமணம், குழந்தைப் பேறு போன்ற சுப நிகழ்வுகள், குடும்ப உறவுகள் மேம்படுதல், ஆன்மீக நாட்டம் அதிகரிப்பு, தர்ம சிந்தனை அதிகரிப்பு, புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு, உயர்கல்வி, ஆராய்ச்சித் துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான காலம், நீண்ட கால நோய்களிலிருந்து நிவாரணம் ஆகிய பலன்கள் கிடைக்கும். இது ஒரு சக்தி வாய்ந்த ராஜ யோகம் என்ற போதிலும் ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள், தசா புத்திகள் மற்றும் பிற நிலைகளை பொறுத்தே பலன்கள் அமையும். எனவே துல்லியமான பலன்களை அறிய ஒரு அனுபவமிக்க ஜோதிடரை அணுகி உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை ஆராய்வது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories