Astrology: ஜூலை 18, இன்றைய ராசி பலன்! சிலருக்கு ராஜயோகம்! பலருக்கு பதவி உயர்வு!

Published : Jul 18, 2025, 05:24 AM IST

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு பலன்களை குறிப்பிடுகின்றன. சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்க, சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த நாளாக அமையும். 

PREV
113
மேஷம் (Aries)

அன்புள்ளம் கொண்ட கடகராசி நேயர்களே இன்று உங்களின் வேலைப்பளு அதிகரிக்கலாம். பயண திட்டங்களில் தாமதம் ஏற்படக்கூடும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜமல்லாத சூழ்நிலைகள் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.

213
ரிஷபம் (Taurus)

நேர்மையின் பக்கம் நிற்கும் ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடைபெற உள்ளன. பணம் வரவுகள் அதிகரிக்கும். பயணம் செய்ய சாதகமான நாள். நண்பர்கள் மூலம் பயன்கள் கிடைக்கும். வீடு சம்பந்தமான விஷயங்களில் தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவலை இருக்கலாம்.

313
மிதுனம் (Gemini)

உண்மையின் வழியில் நடக்கும் உங்களுக்கு இன்று சிறந்த நாள். காரியங்களில் வெற்றி பெறலாம். வருமானம் அதிகரிக்கும். கையிருப்பு நிதியில் நல்ல முன்னேற்றம். குடும்பத்தினரிடம் அன்பாக இருப்பீர்கள், எதிர்கால திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்திவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

413
கடகம் (Cancer)

நல்லவற்றை மட்டும் செய்யும் உங்களுக்கு உழைப்புக்கேற்ப பலன் கிடைக்கும் நாள். தாமதமான திட்டங்கள் முடிவடையும். குடும்பத்தில் மனநிம்மதி நிலவும். புதிய சொத்து தொடர்பான யோசனைகள் வந்தடையும். மன அமைதி பெறுவதற்கு சுவாமி தரிசனம் உதவும்.

513
சிம்மம் (Leo)

தலைமை பன்புடன் அனைவரையும் வழிநடத்தும் சிம்ம ராசி நேயர்களே இன்று உங்களது முயற்சிகள் பலிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை ஈர்க்கலாம். தொழிலில் முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு ஆர்வமுள்ள நாள்.

613
கன்னி (Virgo)

புகழ்ச்சிக்கு மயங்காத உங்களுக்கு இன்று பிடித்தவர்களுடன் சிறு சண்டைகள் ஏற்படலாம். உணர்வுகளை கட்டுப்படுத்தவும். அலுவலகத்தில் உங்கள் கருத்து மதிக்கப்படும். வாடிக்கையாளர்களுடன் சிக்கல் தவிர்க்க உழையுங்கள். கவனமாக பணியாற்ற வேண்டிய நாள்

713
துலாம் (Libra)

எதையும் முன்கூட்டியே கணிக்கும் உங்களுக்கு இன்று வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நலன் சற்று மேம்படும். வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள்.

813
விருச்சிகம் (Scorpio)

அள்ளிக்கொடுக்கும் வள்ளல் குணம் கொண்ட உங்களுக்கு தொழிலில் புதிய திட்டங்கள் கைகொடுக்கலாம். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் வரும். உறவுகளில் மகிழ்ச்சி ஏற்படும். பயணத்திற்கு சாதகமான நாள். ஆரோக்கியத்தில் முன்னேற்பாடு தேவை.

913
தனுசு (Sagittarius)

சொல்வதை மட்டும் செய்யும் குணம் கொண்ட உங்களுக்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாய்ப்பு காத்திருக்கிறது. பணவரவு நல்லபடி இருக்கும். குடும்பத்தில் ஒருமித்த கருத்து நிலவும். நண்பர்கள் உறவுகள் உதவி செய்வார்கள். உங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.

1013
மகரம் (Capricorn)

வெற்றி கிடைக்கும் வரை போராடும் உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் நன்மை ஏற்படும். உங்கள் தைரியம் மற்றவர்களை ஈர்க்கும். பொது செயல்களில் கலந்துகொள்வீர்கள். பணம் கொடுக்கும் நாள்.

1113
கும்பம் (Aquarius)

நேரம் தவறாமல் எதையும் சரியான நேரத்தில் செய்யும் உங்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். தொழில் வளர்ச்சி கூடும். நீங்கள் எடுத்த முயற்சி வெற்றியளிக்கும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சகோதரர் சார்பாக உதவிகள் கிடைக்கும். வங்கி கணக்கில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும்.

1213
மீனம் (Pisces)

நேர்மைக்கு மிதிப்பளிக்கும் உங்களுக்கு இன்று உங்கள் மனதில் நிம்மதி பெருகும். உறவுகளில் சிக்கல்கள் தீரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். விருப்பமான நிகழ்வு நடைபெறும். பணப் பரிவர்த்தனை சுமூகமாக அமையும்.

1313
இவர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும்

மாலவ்ய ராஜயோகம், நவஐஞ்சம யோகம்: கடகம், கன்னி, மீனம், விருச்சிகம் ஆகிய 4 ராசிகளுக்கு லட்சுமி தேவியின் அருளும் வருமான வளர்ச்சியும் கிடைக்கும். 

உபயச்சரி kariyer‑யோகம்: கற்க, சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகியோர் பண, தேவை, பதவி உயர்வு வாய்ப்புகளை அனுபவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார் .

Read more Photos on
click me!

Recommended Stories