
All Rasi Guru Vakra Peyarchi Palangal 2024 in Tamil: மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 12 ராசிகளுக்கும் பலவிதமான பலன்களை கொடுத்து வந்தார். தற்போது குரு பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைந்துள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் ரிஷப ராசியில் வக்ர நிலையிலேயே குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வக்ர நிகவர்த்தி அடைகிறார். இந்த 4 மாதங்களும் 12 ராசிகளுக்கு எந்த மாதிரியான பலன்களை குரு பகவான் கொடுப்பார் என்பதை ரொம்பவே சுருக்கி ஷார்ட் அண்ட் ஸ்வீட் வரியில் கொடுத்திருக்கிறோம்.
கடன் பிரச்சனை, விவாகரத்து, குழுதையின்மை பிரச்சனையால் சிக்கி தவிக்கும் ராசிக்காரர்களுக்கு யாருக்கு என்ன பலன்களை குரு வக்ர பெயர்ச்சி கொடுக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம் ராசி:
முதல் திருமணம் முறிவால் 2ஆவது திருமணத்திற்கு காத்துக் கொண்டிருந்த அன்பர்களுக்கு 2ஆவது திருமணம் நடக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு.
மேஷ ராசி குரு வக்ர பெயர்ச்சி முழு பலன் 2024: Mesha Rasi Guru Vakra Peyarchi Palan: 2ஆவது திருமணம் நடக்கும்? காசு, பணம் கொட்டும், கடன் பிரச்சனை தீரும்!
ரிஷபம் ராசி:
ரிஷப ராசியிலேயே குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில் எல்லா நன்மைகளும் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கான தேவைகள் அனைத்தும் நிறைவேறும். வேலையில் செல்வாக்கு அதிகரிக்கும்.
குரு வக்ர பெயர்ச்சி ரிஷப ராசி முழு பலன்: Guru Vakra Peyarchi:வழக்குகளில் வெற்றி உண்டாகும், புகழ், அந்தஸ்து கூடும் – வாய கொடுத்து மாட்டிக் கொள்ள கூடாது!
மிதுனம் ராசி:
ராசிக்கு 12 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரம் அடைந்த நிலையில் மருத்துவ செலவுகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனைகள் நீங்கும்.
முழு பலனையும் தெரிந்து கொள்ள: Guru Vakra Peyarchi Palan 2024: மிதுன ராசியினருக்கு வயிறு, கிட்னி பிரச்சனை வரலாம், எச்சரிக்கை தேவை!
கடகம் ராசி:
கடக ராசிக்கு குரு பகவான் 11 ஆவது வீட்டில் வக்ரம் அடைந்துள்ளார். இதனால், அதிர்ஷ்ட கதவு தட்ட போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சிக்கல் நிலவும். நிலம் வாங்கும் போது எச்சரிக்கை தேவை.
முழு பலன் பார்க்க: Guru Vakra Peyarchi Palan: நீங்கள் கடக ராசியா? நினைத்த மாதிரி வாழ்க்கை மாறும் – ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்!
சிம்மம் ராசி:
வேலையில் நல்ல சம்பளம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆனால், குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் கவனமாக இல்லையென்றால் விபத்து ஏற்படும் நிலை உண்டாகும். வெளிநாட்டு யோகமும் உண்டாகும்.
மேலும் படிக்க: 2024 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதம் – சிம்ம ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி இதையெல்லாம் செய்யும் – ரெடியா இருங்க!
கன்னி ராசி:
பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி:
வேலையில் இடம் மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு பூர்விக சொத்து கிடைக்க வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம் ராசி:
பணப்பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. வேலையில் கவனம் தேவை. மன அழுத்தம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு ராசி:
குரு பகவான் தனுசு ராசியினருக்கு வேலையிலிருந்த பிரச்சனையை சரி செய்து கொடுப்பார். நினைத்தும் வேலை கிடைக்கும். சொந்தமாக பிஸினஸ் செய்யக் கூடிய யோகம் உண்டாகும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் கூட திரும்பி வரும். சுப செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகள் அதிகரிக்க முதலில் கையில் காசு பணம் இருந்தால் மட்டுமே நடக்கும். அப்போ உங்களுக்கு காசு பணம் கொட்டும்.
முழு பலனுக்கு இங்கே கிளிக் செய்யவும்: உயிரை தவிர எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் தனுசு ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி என்ன செய்யும்?
மகரம் ராசி:
குடும்பத்தில் நல்ல உறவு மேம்படும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளது.
கும்பம் ராசி:
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனம் செலுத்துவது நல்லது. பணியிடத்தில் கூடுதல் சுமை இருக்கும். குடும்ப சூழல் காரணமாக மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். கவனமாக இருக்க வேண்டும்.
மீனம் ராசி:
நீங்கள் கடனாக கொடுத்த பணம் கூட திரும்பி வரும். சுப செலவுகள் அதிகரிக்கும். முழுவதும் படிக்க: ஓ நீங்க மீன ராசியா? கைக்கு வரும் பணம் காத்தோடு பறந்து செல்லும், கடன் வாங்கு நிலை உருவாகும்!