Published : Oct 09, 2024, 08:35 AM ISTUpdated : Oct 09, 2024, 10:41 AM IST
Simmam Rasi Guru Vakra Peyarchi Palangal 2024: 2024 குரு பெயர்ச்சி மே 1 அன்று நிகழ்ந்தது, குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அக்டோபர் 10 அன்று, குரு பகவான் ரிஷப ராசியிலேயே வக்ரம் அடைகிறார். இந்த குரு வக்ரம் சிம்ம ராசிக்கு என்னென்ன பலன்களை ஏற்படுத்தும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
Guru Vakra Peyarchi Palangal 2024: ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சி நிகழ்வதும், அதன் பிறகு குரு வக்ரம் அடைந்து, பின் நிவர்த்தி அடைவது நடக்கும் ஒரு நிகழ்வு தான். நப்படி நடக்கும் குரு பெயர்ச்சி ஒவ்வொரு ராசியினருக்கும் நல்ல பலன்களை தான் கொடுப்பார். அவரவர் ஜாதகத்தில் கிரக நிலைகளின் தன்மைக்கேற்ப பலன்கள் மாறுபடும்.
அப்படி 2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி கடந்த மே 1 ஆம் தேதி நிகழ்ந்தது. இதில், குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இந்த பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு கேட்ட இடத்திலிருந்து கடன் கிடைக்கும். கையில் தாராளமாக பணம் புரளும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
24
Guru Vakra Peyarchi Palangal 2024
வழக்கு விவகாரங்களில் திருப்பம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டும், காணாதது போன்று இருக்க வேண்டும். வேலையில் அலைச்சல் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும். பொருளாதாரத்தில் எந்த எந்த பிரச்சனையும் இருக்காது. தற்போது அக்டோபர் 10ஆம் தேதி நாளை குரு பகவான் ரிஷப ராசியிலேயே வக்ரம் அடைகிறார். இந்த குரு வக்ரம் சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம் வாங்க…
வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவர் குரு பகவான். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அப்படி குரு பகவான் பார்வை மட்டும் உங்களது ராசிக்கு விழுந்துவிட்டால் நீங்கள் தான் கோடீஸ்வரன். அந்தளவிற்கு உங்களை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்.
மேலேயும் தூக்கிவிடுவார். அதே நேரத்தில் கீழேயும் இறக்கிவிடுவார். நாளை நிகழும் குரு வக்ர பெயர்ச்சி பிப்ரவரி 4ஆம் தேதி நீடிக்கிறது. அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடைந்து ரிஷப ராசியில் பயணிப்பார். சரி, பலன்கள் பார்க்கலாம் வாங்க..
வேலையில் நல்ல சம்பளம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆனால், குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். வேலையில் கவனமாக இல்லையென்றால் விபத்து ஏற்படும் நிலை உண்டாகும். வெளிநாட்டு யோகமும் உண்டாகும்.
44
Guru Vakra Peyarchi Palan 2024, Leo, Simmam
கடந்த ஒரு வருடமாக குரு பகவான் உங்களுக்கு நன்மைகளை கொடுத்து வந்த நிலையில் இனி அந்த நிலை இருக்காது. ஆனால், பிரச்சனை எதுவும் பெரிதாக இருக்காது. கையிலிருக்கும் காசு, பணம் குறைந்து கொண்டே போகும். அரசியலில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.
கடனை திருப்பிக் கொடுக்காதவர்கள் வீடு தேடி வந்து கொடுக்கும் நிலை உண்டாகும். காதலில், திருமண உறவில் இருந்த சில கசப்பான சம்பவங்கள் இனி இருக்காது. நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்க வேண்டும். பரிகாரமாக முதலில் குல தெய்வத்தை வழிபட்டு வர வேண்டும். அதன் பிறகு திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை வழிபாடு செய்ய எல்லாம் நன்மையாக நடக்கும்.