Meera Rasi - Guru Vakra Peyarchi Palangal 2024
குரு வக்ர பெயர்ச்சி காரணமாக ஏழரை சனியின் பிடியில் சிக்கி தவிக்கும் மீன ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது குரு பெயர்ச்சி ஆகும். அப்படி குரு பகவான் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இந்த குரு பெயர்ச்சியில் மீன ராசியினருக்கு நல்ல விதமான பலன்கள் ஏற்பட்டாலும் தற்போது வரும் 9ஆம் தேதி குரு பகவான் தனது ராசியிலேயே வக்ரம் அடைகிறார். அப்படி வக்ரம் அடையும் குரு பகவான் மீன ராசியினருக்கு ஏதேனும் மாற்றத்தை கொடுப்பாரா? இல்லையா? என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். வக்ரம் என்றால் பின்னோக்கி நகர்வதை குறிக்கும். ஆனால் பின்னோக்கி நகரமாட்டார். நகர்வது போன்று மாய தோற்றம் தான்.
Pisces - Guru Bhagavan Vakra Peyarchi Palangal 2024
குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் பலன் அதிகம். அப்படி குரு பகவான் மீன ராசிக்கு அதிபதியாக இருந்தாலும் கூட 5, 7, 9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். இதன் மூலமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கவலைகள் குறையும்.
இந்த வக்ர காலத்தில் உங்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்பட்டாலும் நல்ல வேலை கிடைத்து சிம்மாசனத்தில் அமரும் காலம் உண்டாகும். நல்ல நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.
Guru Vakra Peyarchi Palan 2024 Meena Rasi
நிலம், வீடு வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்குரிய ஆவணங்களை முறையாக சரிபார்த்து வாங்க வேண்டும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். வரன் தேடாமலேயே தானாக வரன் தேடி வரும் யோகம் உண்டு. மகன் அல்லது மகளுக்கு திருமண யோகம் கை கூடி வரும். குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். பேச்சில் நிதானம் தேவை.
வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தற்போது மீன ராசியினருக்கு ஏழரை சனி நடப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இது முதல் சுற்று என்பதால் பெரிதாக பாதிப்பு இருக்காது.
உங்களது அம்மா மீன ராசியாவும், அப்பா சிம்ம ராசியாகவும் இருந்தால் இதையும் படித்து பார்த்து பரிகாரம் செய்து கொள்ளுங்கள்...Guru Vakra Peyarchi Palan 2024: மிதுன ராசியினருக்கு வயிறு, கிட்னி பிரச்சனை வரலாம், எச்சரிக்கை தேவை!
Guru Vakra Peyarchi Palan 2024 - Meena Rasi
அக்டோபர் 9ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் மீண்டும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். அதன் பிறகு மீண்டும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதற்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன் மீன ராசிக்கு என்ன செய்யும் என்று பார்க்கலாம். இதே போன்று 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி, ராகு மற்றும் கேது பெயர்ச்சியும் நிகழ போகிறது. அதற்கான பலன்கள் குறித்தும் பார்க்கலாம். மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் குறித்தும் இன்னும் ஓரிரு மாதங்களில் ஏசியாநெட் நியூஸ் தமிழில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கான பலன்கள் ஒவ்வொன்றாக பதிவிடப்படும்.
2024 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதம் – சிம்ம ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி இதையெல்லாம் செய்யும் – ரெடியா இருங்க!