Guru Vakra Peyarchi Palan: நீங்கள் கடக ராசியா? நினைத்த மாதிரி வாழ்க்கை மாறும் – ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்!

First Published | Oct 1, 2024, 8:59 AM IST

Kadaga Rasi Guru Vakra Peyarchi 2024 Palan: 2024 குரு வக்ர பெயர்ச்சியின் போது கடக ராசிக்காரர்களுக்கு பயண ஆசை அதிகரிக்கும், ஆனால் உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது, நிலம் வாங்கும் யோகம் இருந்தாலும் எச்சரிக்கையாக இருக்கவும். பணவரவு அதிகரிக்கும்.

Kadaga Rasi - Guru Vakra Peyarchi Palan 2024

ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். அப்படி அவர் 2024 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்து ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை கொடுத்து வந்தார். இந்த நிலையில் தான் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் ரிஷப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

இந்த வக்ர பெயர்ச்சி வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதன் பிறகு 2025 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நிகழ்கிறது. அப்போது குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு நாம் 2025 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் பற்றி பார்க்கலாம். இப்போது குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Kadagam Rasi - Guru Vakra Peyarchi Palan

இதற்கு முன்னதாக மேஷம், ரிஷபம் மற்றும் மிதுன ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் கடக ராசியினருக்கு குரு வக்ர பெயர்ச்சி என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம் வாங்க….ஊர் சுற்றும் வாலிபனாக திகழ ஆசைப்படுவீர்கள். எதையும் யோசித்து செய்வது உங்களுக்கு நல்ல பன்களை கொடுக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும். கண்ட நேரத்தில், கண்ட இடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வயிற்று பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தலைவலி உள்ளிட்ட பிரச்சனையும் ஏற்படலாம். கணவன் மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். விவாகரத்து செய்யலாமா என்று எண்ணம் தோன்றும்.

Tap to resize

Guru Vakra Peyarchi Palan 2024 Cancer Astrology

குடும்பத்தினருடன் சண்டை, சச்சரவு ஏற்படும். உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். மூத்த சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். அவர்களால் நன்மை உண்டாகும் வாய்ப்பு உண்டு. நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டு. ஆனால், பிரச்சனை உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் உங்களுக்கே ஆபத்தாகிவிடும். எச்சரிக்கை தேவை.

வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. காசு, பணம் குவியும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வந்து சேரும். நீங்கள் கொடுத்த கடன் உங்களை தேடி வரும். அதாவது, நீங்கள் கேட்காமலே கடனை தேடி வந்து கொடுக்கும் நிலை உண்டாகும். சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் அதன் மூலமாக இரட்டிப்பு லாபம் அதிகரிக்கும்.

Guru Vakra Peyarchi Palan 2024 - Kadagam Rasi

யாருடைய மனதையும் புண்படுத்த கூடாது. உங்களுக்கு பிடிக்காதவராக இருந்தாலும் சரி, அவரிடம் சண்டைக்கு செல்ல கூடாது. மௌனமாக சென்று விட வேண்டும். கோபம் அதிகரிக்கும். கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். வேலையில் பிரச்சனை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்காது. எப்போதும் குல தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பரிகாரமாக திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபாடு செய்வது அவசியம்.

திருச்செந்தூர் செல்ல முடியாத கடக ராசியினர் பெசன்ட் நகரில் உள்ள அறுபடை முருகன் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. முருகன் கோயில் என்றாலே செவ்வாய்க் கிழமை செல்வது அவசியம்

Latest Videos

click me!