ரிஷப ராசி குரு வக்ர பெயர்ச்சி பலன் - வழக்குகளில் வெற்றி உண்டாகும், புகழ், அந்தஸ்து கூடும்!

First Published | Sep 26, 2024, 8:28 AM IST

Rishaba Rasi Guru Vakra Peyarchi Palan 2024: அக்டோபர் 9 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ரம் அடைகிறார். இந்த வக்ர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள், வருமானம் இரட்டிப்பு, தொழில் வளர்ச்சி போன்ற நன்மைகள் ஏற்படும். ஆனால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Guru Vakra Peyarchi Palangal 2024 - Rishabha Rasi

Guru Vakra Peyarchi 2024 Rishaba Rasi: மாதந்தோறும் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது. குரு, சனி மற்றும் ராகு, கேது பெயர்ச்சிகள் மட்டுமே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. குரு பகவான் ஆண்டுதோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். கடந்த மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இந்த பெயர்ச்சியின் மூலமாக ரிஷப ராசிக்காரர்கள் நல்ல பலன்களையே பெற்றனர். அவர்களுக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு செல்வ வளம் பெருகும். பேரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். இப்படி நல்ல பலன்களை பெற்ற ரிஷப ராசியினருக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சி என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.

Guru Vakra Peyarchi Palangal 2024

அக்டோபர் 9 ஆம் தேதி புரட்டாசி மாதம் 23ஆம் தேதி குருபகவான் ரிஷப ராசியிலேயே வக்ரம் அடைகிறார். ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அதாவது, குரு பகவான் இருக்கும் இடங்களை விட பார்க்கும் இடங்களுக்கு தான் அதிக பலன்களை கொடுப்பார்.

உதாரணத்திற்கு சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு பிஎம்டபிள்யூ காரில் டிராவல் பண்ண வைப்பார். இப்படிப்பட்ட காலத்தில் குரு பகவான் ரிஷப ராசியிலேயே வக்ர நிலை அடைவதால் என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்று பார்க்கலாம் வாங்க….

Tap to resize

Guru Vakra Peyarchi Palangal - Taurus

புதிய தொழில், வேலை வாய்ப்புகள் உண்டாகும். அதன் மூலமாக வருமானம் இரட்டிப்பாகும். தொழில் வளர்ச்சி ஏற்படும். செல்வம் சேரும். செய்யும் வேலையில் பாராட்டு கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று வருவீர்கள். காதல் வயப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் சுமை நீங்கும். புதியவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு உருவாகும். ஆனால், எதையும் எதிர்பார்க்க கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். காசு, பணம் வந்தால் சேமிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கையில் பணம் இருக்கிறது என்று ஓவராக ஆட்டம் போட்டால் வெறும் கையோடு வீதியில் உட்காரும் நிலை வரலாம். ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்ல பலனை கொடுக்கும். உறவில் சிறு சிறு விரிசல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனைகள் வரலாம்.

Taurus - Guru Vakra Peyarchi Palangal 2024

வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. எச்சரிக்கையோடு இருப்பது இன்னும் நல்லது. இதெல்லாம் பொது பலன்கள் மட்டுமே. அவரவர் ஜாதகத்தில் தசா புத்தி, லக்னம், நட்சத்திரம் ஆகியவற்றின் தன்மை பொறுத்து பலன்கள் மாறுபடும்.

அக்டோபர் 9ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையும் குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். அதன் பிறகு 3 மாதங்கள் ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு 2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி 3ஆம் வீடான மிதுன ராசிக்கு பயணம் செய்வார். அதன் பிறகு 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.

Rishabha Rasi - Guru Vakra Peyarchi Palan 2024

எல்லாம் நல்லதாகவே நடக்க குல தெய்வ கோயில்களுக்கு சென்று வரலாம். குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்கும். நீங்கள் குல தெய்வத்தை கும்பிடுவதை மறந்துவிட்டால் மற்ற கோயில்களுக்கு சென்று வந்தாலும் பலன் கிடைக்காது. குல தெய்வத்தின் அருளும், ஆசியும் இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

Latest Videos

click me!