Mithuna Rasi - Guru Vakra Peyarchi Palan 2024
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் குரு பெயர்ச்சி 2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதன் மூலமாக ஒவ்வொரு ராசியினருக்கும் பல விதமான பலன்கள் கிடைத்தாலும் தற்போது குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைய இருக்கிறார். வரும் அக்டோபர் 9 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் அதாவது வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வரையில் ரிஷப ராசியிலேயே வக்ர நிலையிலேயே இருப்பார். அதன் பிறகு வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
Guru Vakra Peyarchi Palan 2024
2025 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்களை விரைவில் பார்க்கலாம். அதற்கு முன்னதாக மிதுன ராசிக்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க…உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எவ்வளவு காசு, பணம் கையில் இருந்தாலும் மருத்துவ செலவு இருந்து கொண்டே இருக்கும். கிட்னி பிரச்சனை மற்றும் வயிற்று பிரச்சனைகள் கூட வரலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
Guru Vakra Peyarchi Palan 2024 Mithuna Rasi
நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இதுவரையில் கணவன் மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இருவருக்கும் இடையில் ஒற்றுமை மேலோங்கும். பொருளாதார ரீதியில் புதிய உச்சம் தொடுவீர்கள். நீங்கள் கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரும். எனினும், சுப செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகள் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும்.
அவர்களது படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த குரு வக்ர பெயர்ச்சியால் உங்களது வாழ்க்கை தலைகீழாக மாறப் போகிறது. ஆனால், உடன் பிறப்புகளால் சிறு சிறு தொல்லைகள் உண்டாகும். அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
Gemini - Guru Vakra Palan 2024
கண் திருஷ்டி இருந்து கொண்டே இருக்கும். குரு பார்க்க கோடான கோடி பாவங்கள் எல்லாம் பறந்தோடும். உங்களது எதிரிகள் தெரித்து ஓடுவார்கள். பொன், பொருள் சேரும். தொட்டது துலங்கும். பேரும், புகழும் கூடும். வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். பொருளாதாரம் மேம்படும். தொழில், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். இழந்த எல்லாவற்றையும் திரும்ப பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
Gemini Rasi Guru Vakra Peyarchi Palan 2024
தோல்விகளை மறைக்க கோபம் மட்டும் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். எந்த செயலிலும் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. இதுவரையில் இருந்த ஏமாற்றம் இனிமேல் இருக்காது. காதலனிடம் யோசித்து பேசுவது நல்லது. காதல் பார்ட்னரை அக்கறையோடு பார்த்துக் கொள்வது நல்லது.
குரு வக்ர பெயர்ச்சியால் எல்லாமே நல்லதாக நடக்க மாதத்திற்கு ஒரு முறை குல தெய்வ கோயிலுக்கு சென்று வருவது நல்லது. மாதம் மாதம் செல்ல முடியாதவர்கள், 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை குல தெய்வ எல்லையில் கால் வைத்துவிட்டு வருவது உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் நல்லது.