தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். உங்கள் மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சுத் திறன் மற்றும் புத்திக் கூர்மை உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய உறவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.