Sept 15 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே இன்னைக்கு இந்த ஒரு விஷயத்துல கோட்டை விட்டுடாதீங்க.! எல்லாம் போய்டும்.!

Published : Sep 14, 2025, 09:20 PM IST

Today Rasi Palan : செப்டம்பர் 15, 2025 தேதி மகர ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
பொதுவான பலன்கள்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களும், வாய்ப்புகளும் கலந்த கலவையான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது உங்களுக்கு சாதகமாக அமையும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள இன்றைய நாள் நல்ல வாய்ப்பாக அமையும். உங்கள் அனுபவங்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

24
நிதி நிலைமை:

நிதி நிலைமை சீராக இருக்கும். ஆனால் பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கூடாது. வரவுக்கு ஏற்ற செலவுகளை மேற்கொள்வதன் மூலம் நிதி நெருக்கடிகளை தவிர்க்கலாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது உங்கள் எதிர்கால சேமிப்பிற்கு உதவியாக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். இன்றைய தினம் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள்

34
தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தினருடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். சிறு புரிதல் இன்மை கூட பெரிய பிரச்சினையாக மாறிவிடும். எனவே கவனத்துடன் பேசுங்கள். உங்கள் துணையுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது உறவை பலப்படுத்தும். மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே தியானம் அல்லது மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபடலாம்.

44
பரிகாரங்கள்:

இந்த நாள் உங்களுக்கு மேலும் சிறப்பானதாக அமைவதற்கு விநாயகர் அல்லது ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள். கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. காலை எழுந்ததும் சூரிய நமஸ்காரம் அல்லது “ஓம் ஹனுமந்தாய நமஹ” என்கிற மந்திரத்தை உச்சரிப்பது மன உறுதியை அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories