Sept 15 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே இன்னைக்கு நீங்க தொட்டதெல்லாம் வெற்றி தான்.! அதிர்ஷ்டம் உங்க பக்கம்

Published : Sep 14, 2025, 09:10 PM IST

Today Rasi Palan : செப்டம்பர் 15, 2025 தேதி கும்ப ராசிக்கான ராசி பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
14
பொதுவான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்கள் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படும். உங்களுடைய புது முயற்சிகள் பாராட்டுகளைப் பெறும். அதன் காரணமாக புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரலாம். அதை திறம்பட கையாள்வதன் மூலம் நற்பெயரைப் பெறுவீர்கள். அலுவலக ரீதியாக பயணங்கள் செய்யும் வாய்ப்புகள் உருவாகலாம்.

24
நிதி நிலைமை:

கும்ப ராசி நேயர்களுக்கு நிதி ரீதியாக இந்த நாள் நல்ல பலன்களைத் தரும். எதிர்பாராத வழிகளில் பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பண உதவிகள் அல்லது வங்கிக் கடன்கள் கிடைக்கும். நீண்ட நாட்கள் இருந்த கடன் பிரச்சனைகள் தீரும். முதலீடுகள் குறித்த நல்ல முடிவுகளை எடுப்பீர்கள் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

34
தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரம் செலவளிப்பீர்கள். இது உங்கள் உறவுகளை வலுப்படுத்தும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்லுறவு ஏற்படும். நீண்ட நாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பர்களை சந்திப்பீர்கள். குழந்தைகள் உங்கள் சொல் பேச்சை கேட்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரலாம்.

44
பரிகாரங்கள்:

இந்த நாள் மேலும் சிறப்பானதாக அமைவதற்கு சிவபெருமான் அல்லது பைரவரை வழிபடலாம். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் தானியங்கள் வைப்பது நன்மை தரும். “ஓம் சிவாய நம” என்கிற மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது மன அமைதியையும், அதிர்ஷ்டத்தையும் தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories