Astrology: சிவனுக்கு மிகவும் பிடித்த 4 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? உயிர் போகும் தருவாயிலும் இவர்களை கை விட மாட்டாராம்.!

Published : Sep 14, 2025, 05:46 PM IST

According to astrology lord shiva favourite zodiac signs: ஒவ்வொரு இறைவனுக்கும் பிடித்தமான ராசிகள் என்று சில உள்ளன. அந்த வகையில் சிவபெருமானுக்கு பிடித்தமான ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
17
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள்

ஜோதிடத்தின்படி சிவபெருமான் குறிப்பிட்ட சில ராசிகளை விரும்புவதாகவோ அல்லது அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதாகவோ நேரடியாக கூறப்படவில்லை. இருப்பினும் அவரது தன்மைகள், ஆன்மீக முக்கியத்துவம், அவருக்கு உகந்த குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில ராசிகளுக்கு சிவபெருமான் தனது அருளை வாரி வழங்குகிறார். சிவபெருமான் சமநிலை, அமைதி, தியானம், தவம் ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறார். அவர் உலகின் அழிவையும், புனரமைப்பையும் குறிக்கும் மகா தேவனாகவும், உலகின் அனைத்து உயிர்களுக்கும் கருணை மற்றும் அருளை வழங்கும் தெய்வமாகவும் விளங்கி வருகிறார்.

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள் என்று கருதப்படுபவை அவரது இயல்புக்கு ஏற்ற ஆன்மீகம், அமைதி, உண்மை மற்றும் தவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட குணங்களையும் கிரகங்களின் ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கிறது. அந்த வகையில் சிவபெருமானின் தன்மைகளுடன் ஒத்துப்போகும் ராசிகள் சிவனுக்கு நெருக்கமானவை என்று கருதலாம். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
மீனம்

மீன ராசி குரு ஆதிக்கம் செலுத்தும் ராசியாகும். குரு பகவான் தியானத்தின் உருவமாகவும், மோட்சத்தை அருள்பவராகவும் சிவனின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இதன் காரணமாக குருபகவான் ஆளும் மீன ராசி சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றாக உள்ளது. மீன ராசிக்காரர்கள் பொதுவாக கருணையும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆன்மீக ஆழம் சிவபெருமான் கயிலை மலையில் தவம் தவம் செய்யும் இயல்புக்கு ஒத்ததாக இருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் சிவபூஜை, தியானம் மற்றும் சிவ மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் சிவபெருமானின் அருளை எளிதில் பெற முடியும்.

37
விருச்சிகம்

விருச்சிக ராசி செவ்வாய் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். இவர்கள் உள்ளார்ந்த மாற்றம் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்கள். சிவபெருமான் அழிவு மற்றும் புனரமைப்பின் கடவுளாக இருப்பதால், இந்த ராசியின் இயல்பு சிவபெருமானுடன் ஒத்துப் போகிறது. மேலும் விருச்சிக ராசிக்காரர்கள் பக்தியில் தீவிரமாகவும், ஆழமாகவும் இருப்பார்கள். இவர்களின் ஆழமான ஆன்மீக ஆர்வம் சிவபெருமானின் தத்துவங்கள் மற்றும் ருத்ர தாண்டத்தின் ஆற்றலுடன் இணைகிறது. இவர்கள் சிவ மந்திரங்களை உச்சரிப்பதாலும், சிவபெருமானை வணங்குவதாலும், அவரை நினைத்து தியானிப்பதாலும் ஆன்மீக உயர்வை அடையலாம்.

47
மகரம்

மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தின் கீழ் வருபவர்கள். இவர்கள் ஒழுக்கம், கடின உழைப்புடன் தொடர்புடையவர்கள். சனி பகவானே சிவபெருமானின் உண்மையான பக்திக்கு அடிபணிவதால் மகர ராசிக்காரர்களும் சிவனின் அருளை பரிபூரணமாக பெறுகின்றனர். மகர ராசிக்காரர்கள் பொதுவாக அமைதியான மற்றும் உறுதியான மனநிலை கொண்டவர்கள். இது சிவபெருமானின் சாந்தமான மற்றும் தியான நிலையுடன் ஒத்துப் போகிறது. மகர ராசிக்காரர்கள் சிவனின் அருளை முழுமையாக பெறுவதற்கு சிவாஷ்டகம், சிவதாண்டவ ஸ்தோத்திரம் போன்றவற்றை படிப்பதன் மூலமாகவோ, சிவாலயங்களில் நீண்ட நேரம் தியானம் செய்வதன் மூலமாகவோ பலன் அடையலாம்.

57
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆளுகைக்கு கீழ் வருபவர்கள். இவர்கள் புதிய சிந்தனைகள், மனிதநேயம் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்கள். சிவபெருமான் உலகின் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிபவராக இருப்பதால், கும்ப ராசியின் இந்த குணங்கள் அவருக்கு ஏற்றவையாக உள்ளன. கும்ப ராசிக்காரர்கள் அறிவு மற்றும் தத்துவத்தை தேடுபவர்களாக உள்ளனர். சிவபெருமானின் ஆதியோகி என்கிற பண்பு இந்த ராசியின் அறிவு தேடும் இயல்புடன் ஒத்துப் போகிறது. கும்ப ராசிக்காரர்கள் சிவபெருமானின் புராணங்களை படிப்பதன் மூலமும் கேட்பதன் மூலமும் அவருடைய ஆழமான தொடர்பை உருவாக்கலாம்.

67
சிவனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை

சிவபெருமான் உலகின் அனைத்து உயிர்களையும் சமமாக கருதுபவர். அவரது அருள் என்பது அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும். ஆனால் மேற்கூறப்பட்ட ராசிகள் அவரது ஆன்மீக மற்றும் தத்துவ குணங்களுடன் இயல்பாக ஒன்றிப் போகின்றன. மற்ற ராசிக்காரர்களும் சிவபெருமானை உள்ளன்புடன் வணங்குவதன் மூலம் அவருடைய அருளைப் பூரணமாக பெறலாம். “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை உச்சரிப்பது அனைத்து ராசிக்காரர்களுக்கும் பொருத்தமானது. மகா சிவராத்திரி, பிரதோஷ விரதங்கள் இருக்கலாம். வில்வ இலைகளால் அர்ச்சனை, பால் அபிஷேகம் செய்வது மற்றும் ருத்ராட்ச மாலை அணிவதன் மூலமாகவும் சிவனின் அருளை பரிபூரணமாக பெறலாம்.

77
அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவார்

சிவபெருமான் குறிப்பிட்ட ராசிகளை மற்றும் விரும்புவார் என்று கூறுவது அவருடைய பரந்த அருளை குறுக்குவதற்கு சமமாகும். இந்த கட்டுரை அதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கவில்லை. அவரது ஆன்மீக இயல்புடன் ஒத்துப் போகும் ராசிகள் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. உண்மையான இரக்க குணம், தவம், கருணை மற்றும் தானங்களில் சிறந்து விளங்கும் அனைத்து உயிர்களுக்கும் இறைவன் சமமான அருளை வழங்குகிறார். பக்தியுடன் அவரை வணங்கினால் எந்த ராசிக்காரராக இருந்தாலும் அவருக்கு சிவபெருமான் பரிபூரணமாக வழங்குவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories