
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியும் தனித்துவமான குணங்களையும், ஆளுமைப் பண்புகளையும் கொண்டுள்ளன. சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே துணிச்சலான மனப்பான்மையும், எதையும் எதிர்கொள்ளும் வீரத்தையும் பெற்று இருக்கின்றன. இந்த கட்டுரையில் ஜோதிடத்தின்படி பிறவிலேயே துணிச்சல் மிக்கவர்களாக கருதப்படும் நான்கு ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். செவ்வாய் கிரகம் என்பது போர் மற்றும் தைரியத்திற்கு உரிய கிரகமாகும். எனவே மேஷ ராசிக்காரர்கள் எந்த ஒரு சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் துணிவு கொண்டவர்கள். இவர்களுக்கு பயம் என்பதே கிடையாது. ஒரு செயலை செய்வதற்கு முன்னர் அவர்கள் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. மனதில் ஒரு தீர்க்கமான முடிவெடுத்துவிட்டால், அதை அடைய எந்த தடையையும் தகர்த்து எறிய தயாராக இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களின் தைரியமும், உறுதியும் அவர்களை எப்போதும் முன்னணியில் வைத்திருக்கும்.
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வலிமையான ஆளுமை மற்றும் தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். இந்த ராசியை சூரிய பகவான் ஆள்கிறார். இவர்கள் இயற்கையாகவே ஒரு அரச கம்பீரத்துடன் திகழ்கின்றனர். இவர்கள் எந்த சூழலிலும் தங்களை முன்னிலைப்படுத்தி தைரியமாக முன்னேறுவார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு பயம் என்பது ஒரு தடை கிடையாது. மாறாக அது அவர்களுக்கு உந்துதலாக மாறுகிறது. இவர்கள் தங்கள் குறிக்கோளை அடைய கடினமான உழைப்பார்கள். மற்றவர்கள் தயங்கும் இடங்களில் கூட தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்வார்கள். ஒரு மேடை அல்லது பொது இடங்களில் தயக்கமில்லாமல் பேசுவார்கள். இவர்களின் இந்த துணிச்சல் மற்றவர்களை ஈர்க்கும் ஒரு காந்த சக்தியாக அமைகிறது.
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோ கிரகங்களால் ஆளப்படுபவர்கள். இவர்கள் தங்கள் உணர்ச்சி ஆழத்திற்கும், உறுதியான மனநிலைக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் எந்த ஒரு சவாலையும் ஆழமாக ஆராய்ந்து, அதை எதிர்கொள்ளும் துணிவு கொண்டவர்கள். இவர்களுக்கு பயம் என்பது ஒரு தற்காலிக உணர்வு மட்டுமே. அதை மீறி தங்கள் இலக்கை அடைய இவர்கள் தயாராக இருப்பார்கள். மற்றவர்கள் தவிர்க்க விரும்பும் உணர்ச்சி மிகுந்த அல்லது ஆபத்தான சூழல்களை விருச்சிக ராசிக்காரர்கள் தைரியமாக எதிர்கொள்வார்கள். இவர்களின் இந்த உறுதியும், தீவிரமும் அவர்களை எந்த சூழலிலும் வெற்றி பெற வைக்கிறது.
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமான மனப்பான்மை மற்றும் புதிய அனுபவங்களை தேடும் ஆர்வத்திற்கு பெயர் பெற்றவர்கள். குரு பகவானால் ஆளப்படும் இவர்கள் எந்த ஒரு பயத்தையும் தாண்டி, புதிய சாகசங்களை தழுவுவதில் துணிச்சல் காட்டுகின்றனர். இவர்கள் பயணத்தின் மூலம் கற்றல் மற்றும் புதிய கலாச்சாரங்களை ஆராய்வதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இவர்கள் தங்கள் வளையத்தை விட்டு வெளியேறுவதற்கு தயங்குவதில்லை. உதாரணமாக ஒரு புதிய நாட்டிற்கு பயணம் செய்வது, புதிய தொழிலை தொடங்குவது அல்லது பொருளாதார சிக்கலை சந்தித்துக் கொண்டு இருந்தாலும் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் திருப்தி இல்லை என்றால் அந்த வேலையில் இருந்து வெளியேறுவது போன்ற துணிச்சலான முடிவுகளை எடுப்பார்கள். இந்த துணிச்சல் அவர்களை எப்போதும் உற்சாகமாகவும், உயிரோட்டமாகவும் வைக்கிறது.
ஜோதிடத்தின்படி மேற்குறிப்பிடப்பட்ட நான்கு ராசிக்காரர்கள் பிறவியிலேயே துணிச்சல் மிக்கவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களின் தைரியமும், உறுதியும் எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையும் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இவர்களின் தைரியமான குணங்கள் மற்றவர்களுக்கு உத்வேகமாக அமைவதோடு வாழ்க்கையில் பெரிய இலக்குகளை அடையவும் உதவுகின்றன. இருப்பினும் இந்த துணிச்சல் சில சமயங்களில் அவசர முடிவுகளுக்கு வழி வகுக்கலாம். எனவே இந்த ராசிக்காரர்கள் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)