Astrology: குரு பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் சந்திரன்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!

Published : Sep 14, 2025, 11:08 AM IST

ஜோதிடத்தின்படி சுப கிரகங்களாக விளங்கும் குரு சந்திரன் இணைவால் கஜகேசரி ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் பலன்பெறும் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
மிதுன ராசியில் சந்திக்கும் குரு சந்திரன்

ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அப்போது பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. தற்போது செப்டம்பர் 14 அன்று சந்திரன் மிதுன ராசியில் நுழைகிறார். ஏற்கனவே மிதுன ராசியில் குரு பகவான் பயணித்து வரும் நிலையில், சந்திரனும் குருவும் இணைந்து சக்தி வாய்ந்த கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்க உள்ளனர். சந்திர பகவான் செப்டம்பர் 14 ஆம் தேதி 8:03 மணிக்கு மிதுன ராசியில் நுழைந்து, செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாலை 12:24 வரை இந்த ராசியில் இருப்பார். சுமார் 54 மணி நேரத்தில் கஜகேசரி ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெற உள்ளனர்.

25
கஜகேசரி ராஜயோகம் 2025

‘கஜ’ என்ற வார்த்தை யானையைக் குறிக்கிறது. இது வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையின் அடையாளமாகும். ‘கேசரி’ என்பது சிங்கத்தை குறிக்கும். இது தைரியத்தையும், அதிகாரத்தையும் குறிக்கிறது. கஜகேசரி யோகமானது தனி நபர்களுக்கு செல்வம், மரியாதை மற்றும் வாய்ப்புகளை வழங்கும் யோகமாகும். இந்த யோகமானது குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத லாபங்கள், தொழில் வளர்ச்சி, மகிழ்ச்சியை தரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

35
மிதுனம்

மிதுன ராசியில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. எனவே மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சிக்கான புதிய கதவுகள் திறக்கும். செல்வத்தின் வீடான இரண்டாவது வீட்டில் இந்த யோகம் உருவாவதால், திடீர் பண ஆதாயங்களை அனுபவிக்கலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் குறிப்பிடத்தகுந்த லாபம் கிடைக்கும். உங்கள் தகவல் தொர்பு திறன் மேம்படும். பேச்சாற்றல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்க்கை இணக்கமாகவும், வளமாகவும் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு இருப்பதால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

45
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு சந்திரன் இணைந்து உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் பல துறைகளில் வெற்றிகளை வழங்கவுள்ளது. இந்த யோகத்தின் செல்வாக்கால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள். வெற்றிக்கான பாதை எளிதாகும். பணியிடத்தில் உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக உங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த நேரத்தில் உருவாகும் நிதி ஆதாயங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை, சமூக அந்தஸ்து, உயர்வு ஆகியவற்றை காணலாம்.

55
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கவுள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாவதால் தொழில் மற்றும் வணிகத்துறையில் எதிர்பாராத நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீக ரீதியான பயணங்கள் ஏற்படலாம். உங்கள் ஆளுமை அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகுவதால் லாபம் இரட்டிப்பாகும். உங்கள் இலக்கை நோக்கி அச்சமின்றி முன்னேறுவீர்கள். பொறுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories