Astrology: இந்த 4 ராசிக்காரங்கிட்ட வம்பு வச்சிக்காதீங்க.! அப்புறம் உங்க வாழ்க்கையே நரகமாகிடும்.!

Published : Sep 02, 2025, 04:21 PM IST

ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் ஆபத்தான எதிரிகளாக விளங்குவார்கள் என கூறப்படுகிறது. அந்த ராசிகள் என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
எதிரிகளாக மாறும் ராசிகள்

நமக்கு நண்பர்கள் இருப்பது போலவே எதிரிகளும் இருப்பார்கள். கண்ணுக்குத் தெரிந்து சில எதிரிகளும், கண்ணுக்குத் தெரியாமல் சில எதிரிகளும் இருப்பார்கள். ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிகளுக்கும் தனித்தன்மையான குணங்கள் உள்ளன. சில ராசிகள் அன்பு, பாசம், நட்பு போன்ற பண்புகளால் பிரபலமானவை என்றால், சில ராசிகள் கோபம், பிடிவாதம், வஞ்சக மனப்பான்மை போன்ற குணங்களை கொண்டுள்ளனர். இவர்கள் எதிரிகளாக மாறும்பொழுது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த கட்டுரையில் எதிரிகளாக மாறினால் நமக்கு சவாலாக மாறும் நான்கு ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்கள், உற்சாகமானவர்கள், தலைமைப் பண்பு கொண்டவர்கள். ஆபத்தான எதிரிகளில் இவர்கள் முதலிடம் பிடிக்கிறார்கள். மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் விளங்கி வருகிறார். செவ்வாய் போர் கிரகமாக அறியப்படுகிறார். எனவே மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆக்ரோஷம் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் எதிரிகளாக மாறும் பொழுது மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர். தங்கள் எதிரிகளை நேருக்கு நேர் எதிர் கொள்ள இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் உடனடியாகவும், உணர்ச்சிவசப்பட்டும் செயல்படுவார்கள். கோபத்தில் எதையும் யோசிக்காமல் பேசுவார்கள். இவர்களின் தைரியமும், பிடிவாதமும் இவர்களை கடினமான எதிரியாக மாற்றுகிறது. இவர்களுடன் மோதுவதற்கு முன்பு பொறுமையாக உரையாடி பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பது நல்லது.

35
விருச்சிகம்

மேஷ ராசியைப் போலவே விருச்சிக ராசியின் அதிபதியாக செவ்வாய் விளங்கி வருகிறார். எனவே இவர்களும் இயற்கையிலேயே கோபம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் பார்ப்பதற்கு அமைதியானவர்கள் போல தோன்றினாலும், அவர்கள் மனதில் தீவிரமான உணர்ச்சிகளும், வன்மங்களும் நிறைந்திருக்கும். இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கும் பொழுது மிகச்சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் எதிரியாக மாறினால் தீவிரமான பழிவாங்கும் மனப்பான்மை உடையவர்களாக மாறுவார்கள். இவர்களிடம் மன்னிக்கும் பண்பு குறைவாகவே உள்ளது. உங்களை எதிராளியாக நினைத்து விட்டால் திட்டமிட்டு, பொறுமையாக செயல்பட்டு உங்களை வீழ்த்துவார்கள். உணர்ச்சி ரீதியாகவோ, மன ரீதியாகவோ புண்படுத்துவதற்கு முன்னர் உங்கள் பலவீனங்களை ஆராய்ந்து அதை ஆயுதமாக பயன்படுத்துவார்கள்.

45
மகரம்

மகர ராசிக்காரர்கள் பிற ராசிகளை காட்டிலும் மிக ஆழமான ஆளுமை கொண்டவர்கள். இவர்களிடம் சிறு பிரச்சனை செய்தால் போதும் அதை பெரிய வாக்குவாதமாக மாற்றி விடுவார்கள். இவர்கள் மிகவும் ஆக்ரோஷமான குணத்தை கொண்டுள்ளனர். இவர்கள் ஒரு வேலையை சரியாக செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் நடத்தைகளை மாற்றிக் கொள்வதிலும் கை தேர்ந்தவர்கள். இவர்களிடம் யாராவது பிரச்சினை செய்து விட்டால் அவர்களை எளிதில் விட்டு விடமாட்டார்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் அந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் பேசி சண்டை வளர்ப்பார்கள். இவர்கள் தங்களது சொல்லால் பிறரை புண்படுத்துவதில் வல்லவர்கள். இவர்கள் எப்போது தாக்குவார்கள் என்பது தெரியாது. ஆனால் அவர்கள் தாக்கும் பொழுது கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.

55
கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்கள் சனியால் ஆளப்படுபவர்கள். இவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், ஒன்றுக்கு நான்கு முறை சிந்திக்கும் திறனும் கொண்டவர்கள். எல்லா விஷயங்களும் சரியாக நடக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பெரும்பாலும் ஆதிக்க மனப்பான்மை கொண்டு விளங்குகின்றனர். இதன் காரணமாக இவர்கள் தங்கள் சுற்றி உள்ளவர்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர். அவர்கள் விஷயத்தில் தலையிட முயற்சித்தால் அல்லது அவர்களுடன் பகைமை பாராட்ட முயன்றால் எதிரிகளை அவ்வளவு எளிதில் விட்டு விட மாட்டார்கள். இவர்களுடன் ஏன் வாக்குவாதம் வைத்துக் கொண்டோம் என்கிற அளவிற்கு பிரச்சினையைப் பெரிதாக்கி எதிரிகளின் வாழ்க்கையை நரகமாக மாற்றி விடுவார்கள். இவர்களுடன் பகைமை கொள்வதற்கு முன்னர் நன்கு யோசிக்க வேண்டியது அவசியம்.

(குறிப்பு: ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் உள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட ராசிகள் எதிரிகளாக மாறும் பொழுது அவர்களின் தனித்துவமான பண்புகள் அவர்களை சவாலானவர்களாக மாற்றுகின்றன. இவர்களுடன் மோதுவதற்கு முன்பு அவர்களின் குணத்தை புரிந்து கொண்டு அமைதியான வழியில் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பது நல்லது. இந்த ஜோதிட தகவல்கள் பொதுவான வழிகாட்டுதல்கள் மட்டுமே. இதன் விளைவுகள் மற்றும் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories