12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு தனது உச்ச ராசிக்கு திரும்புவதால் கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்க உள்ளன. குருவின் சஞ்சாரத்தால் சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்கள் புகழ் கூடும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் கிடைக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து சேரலாம். எதிர்பாராத பண வரவுகள் மூலம் உங்கள் சேமிப்பை அதிகப்படுத்த சிறந்த காலமாகும்.
(குறிப்பு: இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட கருத்துக்களில் அடிப்படையிலானது மட்டுமே. இதன் விளைவுகள் மற்றும் நம்பகத் தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகம் மாறுபடும் என்பதால் அனுபவம் மிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)