Birth Date: இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களை எல்லாரும் விரும்புவார்களாம்.!

Published : Jul 15, 2025, 12:19 PM IST

எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மென்மையான, அன்பான பண்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரின் இதயங்களை வெல்லும் திறனை கொண்டுள்ளனர்.

PREV
15
Birth Date

நம்மை சுற்றி இருக்கும் சிலரிடம் மட்டும் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். அவர்களின் நடத்தை, பேசும் விதம், இயல்பான குணம் அனைவரையும் ஈர்க்கின்றன. அவர்கள் தங்களை அறியாமலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்கள். ஜோதிடம் மற்றும் எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்கள் அத்தகைய ஆளுமையைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மீது பலரும் இயற்கையாகவே அன்பு செலுத்துகின்றனர். அவர்கள் யார்? அந்த தேதிகள் என்ன? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

25
2-ம் தேதியில் பிறந்தவர்கள்

இரண்டாம் தேதியில் பிறந்தவர்கள் அமைதி மற்றும் பாசத்திற்கு அடையாளமாக விளங்குகின்றனர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் கொண்டவர்கள். அவர்கள் பிறரிடம் எப்போதும் பரிவு காட்டுவதுண்டு. அவர்கள் எங்கிருந்தாலும் மற்றவர்களின் இதயங்களை வெல்ல முடியும். தங்களை சுற்றி இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர்கள் மிகுந்த மரியாதை அளிக்கின்றனர். அதனால்தான் இந்த தேதியில் பிறந்தவர்களை பலரும் நேசிக்கிறார்கள். இவர்களின் இந்த குணமானது நட்பு வட்டாரத்தை அதிகரிக்கவும், பலரின் கவனத்தை ஈர்க்கவும் உதவி புரிகிறது.

35
3-ம் தேதியில் பிறந்தவர்கள்

மாதத்தின் மூன்றாம் தேதியில் பிறந்தவர்கள் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை கொண்டவர்கள். இவர்கள் யாருடனும் எளிதில் பழகுவார்கள். இந்த தேதியில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். அவர்களின் பேசும் விதமும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமும் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இருக்கும். தங்களின் அறிவுப்பூர்வமான சிந்தனையை பிறரிடம் வெளிப்படுத்துவதன் மூலம் அவர்கள் பிறரை ஈர்க்கின்றனர். தங்களை சுற்றி இருப்பவர்களிடம் அன்பை பரப்பும் சக்தி அவர்களுக்கு உண்டு. அதனால் தான் அவர்களுடன் நட்பு பாராட்ட பலரும் விரும்புகின்றனர். பலர் அவர்களின் நட்பு வட்டத்தில் இணைய ஆர்வமும் காட்டுகின்றனர்.

45
15-ஆம் தேதியில் பிறந்தவர்கள்

மாதத்தின் 15 ஆம் தேதியில் பிறந்தவர்கள் பிறரை ஈர்க்கும் சக்தி கொண்டவர்கள். இவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சுற்றி உள்ளவர்கள் மீது மிகுந்த அன்பை பொழிகிறார்கள். அவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி சிந்திக்காமல் பிறரை பற்றி முழு மனதுடன் சிந்திக்கிறார்கள். படைப்பாற்றல் மிக்க அவர்கள் புதுமையாக விளங்குகின்றனர். அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் சிந்தனை காரணமாக அவர்கள் பலராலும் கவரப்படுகின்றனர். அவர்களை அறியாமலேயே அவர்கள் போற்றப்படுகின்றனர். தங்களது புத்திசாலித்தனம் மற்றும் பேச்சாற்றல் காரணமாக பிறரை கவரும் திறனை இவர்கள் கொண்டுள்ளனர்.

55
17-ஆம் தேதியில் பிறந்தவர்கள்

17 என்கிற எண் 1+7 = 8 என கருதப்படுகிறது. 8 ஆம் எண்ணானது திறமை மற்றும் உயர் ஒழுக்கத்திற்காக அறியப்படுகிறது. இந்த தேதியில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களின் செயல்கள், விடாமுயற்சி, ஒரு வேலையை செய்து முடிக்கும் திறமை மற்றவர்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது. எட்டாம் தேதியில் பிறந்தவர்கள் தங்களுடைய விடாமுயற்சி காரணமாக பிறரை கவர்கின்றனர். அவர்கள் கண்ணியம் மரியாதை மற்றும் தலைமைத்துவ பண்புகளுடன் விளங்குகின்றனர். எனவே எட்டாம் தேதியில் பிறந்தவர்களும் பிறரை வசீகரிக்கும் தன்மையை கொண்டவர்களாக விளங்குகின்றனர்.

குறிப்பு: எண் கணிதத்தின்படி சிறப்பு தேதிகளான 2,3,15,17 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சமூகத்தில் ஒரு சிறந்த இடத்தை பிடிக்கின்றனர். அவர்கள் இயற்கையாகவே வசீகரமானவர்கள், அமைதியானவர்கள், பணிவின் உருவகமாக விளங்குகின்றனர். எனவே தான் அவர்கள் பிறரால் ரகசியமாக போற்றப்படுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories