July 15 Astrology: இன்றைய ராசிபலன்! பலருக்கு பணமழைக்கு வாய்ப்பு! சிலருக்கு ராஜயோகம்!

Published : Jul 15, 2025, 07:16 AM IST

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தொழில், குடும்பம், நிதி, ஆரோக்கியம் போன்றவற்றில் என்ன பலன்களைப் பெற உள்ளன என்பதை விளக்குகிறது. உங்கள் ராசிக்கு என்ன காத்திருக்கிறது என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

PREV
112
மேஷம் (Mesha – Aries)

எப்போது இன்முகத்துடன் காணப்படும் மேஷராசி நேயர்களே! இன்று குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழிலில் உங்கள் முயற்சிக்கு நல்ல எதிரொலி வரும். நிதியில் லாபம் தெரியும். நண்பர்கள் வழியாக புது வாய்ப்பு வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். அனாவசிய செலவுகளை தவிர்க்கவும்.

212
ரிஷபம் (Rishabha – Taurus)

எப்போதும் நேர்மையாக இருக்கும் உங்களுக்கு இன்று வேலைப்பளு அதிகரிக்கும். அலுவலக மேலாளர்கள் நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். குடும்பத்தில் சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம் – அமைதியாக பேசுங்கள். பண வரவு ஓரளவு இருக்கும். ஆரோக்கியத்தில் சோர்வு உண்டு.

312
மிதுனம் (Mithuna – Gemini)

எல்லோரையும் நல்வழிப்படுத்தும் திறனுள்ள உங்களின் திட்டங்களில் இன்று நன்மை தெரியும். வியாபாரத்தில் லாபம் வரும். பிள்ளைகளிடம் மகிழ்ச்சி பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நண்பர்கள் உதவி தருவார்கள்.

412
கடகம் (Kataka – Cancer)

உண்மையின் பக்கம் நிக்கும் கடக ராசி நேயர்களே உங்களின் பழைய பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒருவரின் நலனில் கவனம் தேவை. நிதி நிலை சீராக இருக்கும். ஆன்மிக சிந்தனையில் ஈடுபட நல்ல நாள்.

512
சிம்மம் (Simha – Leo)

எல்லோரையும் தலைமையேற்று வழிநடத்தும் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவை தட்டும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல சூழல் கிடைக்கும். பண வரவு திருப்தி தரும். செலவுகள் கட்டுப்பாட்டில் வையுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களில் கவனம் தேவை.

612
கன்னி (Kanya – Virgo)

எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் கன்னிராசி நேயர்களே இன்று உங்களுக்கு தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்ப மகிழ்ச்சி நிலவும். நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும். பிள்ளைகள் நலனில் நன்மை வரும். நிதியில் சிறு செலவுகள் கூடும். உடலில் சோர்வு அதிகரிக்கும்.

712
துலாம் (Tula – Libra)

நீதியின் படி நடக்கும் நீங்கள் இன்று நிதி முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் புதிய பொறுப்புகள் ஏற்படும். குடும்ப உறவு வலுப்படும். பிள்ளைகள் சிறந்த செய்தி தருவார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

812
விருச்சிகம் (Vrischika – Scorpio)

உழைப்பை மட்டுமே நம்பும் உங்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்பு இருக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். நண்பர்கள் ஆதரவு தருவார்கள். பயணங்களை கட்டுப்படுத்தவும்.

912
தனுசு (Dhanu – Sagittarius)

எந்தவொரு செயலையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் உங்களுக்கு இன்று தொட்டது துலங்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.நிதியில் சற்று சிக்கல் ஏற்படும். பிள்ளைகள் நலனில் கவலை இருக்கும். நண்பர்கள் உதவியுடன் சிக்கல்கள் தீரும். ஆன்மிக சிந்தனை நிம்மதி தரும்.

1012
மகரம் (Makara – Capricorn)

தொழிலில் முயற்சி வெற்றி தரும். நிதியில் லாபம் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் ஆலோசனை உதவும். உடல்நலம் சீராக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்து.

1112
கும்பம் (Kumbha – Aquarius)

சொன்ன சொல் மாறாமல் நேர்மையாக வாழும் உங்களின் பழைய பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். தொழிலில் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நிதி நிலை முன்னேற்றம் காண்பது. ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.

1212
மீனம் (Meena – Pisces)

வள்ளல்தன்மையுடன் காணப்படும் உங்களுக்கு இன்று நல்ல நாள். தொழிலில் உயர்வு வாய்ப்பு. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories