நம்ம வாழ்க்கையில பலரை சந்திப்போம். ஆனா, எல்லாரோட குணமும் ஒரே மாதிரி இருக்காது. நியூமராலஜி படி, சில குறிப்பிட்ட தேதிகள்ல பிறந்தவங்க தன்மானத்துக்குப் பங்கம் வந்தா சும்மாவே இருக்க மாட்டாங்க. அவங்ககிட்ட பகைச்சுக்கிட்டா என்ன ஆகும் தெரியுமா?
ஒருத்தரோட பிறந்த தேதியை வெச்சு அவங்க குணத்தை சொல்லிடலாம்னு நியூமராலஜி சொல்லுது. சில குறிப்பிட்ட எண்கள்ல பிறந்தவங்களோட ஈகோவை யாராவது காயப்படுத்திட்டா, அவங்க வாழ்நாள்ல மன்னிக்கவே மாட்டாங்க. அந்த 3 முக்கிய எண்கள் என்னென்னனு பார்க்கலாம்.
24
இவங்களுக்கு தன்மானம் ரொம்ப அதிகம்
எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 தேதிகள்ல பிறந்தவங்களோட எண் இது. இவங்களுக்கு அதிபதி சூரியன். சூரியனோட ஆதிக்கத்தால, இவங்களுக்கு தன்மானம் ரொம்ப அதிகம். இவங்களோட ஈகோவை யாராவது சீண்டிட்டா, யாரு பேச்சையும் கேட்க மாட்டாங்க. மனச காயப்படுத்தினவங்கள எதிரியா பார்ப்பாங்க, இல்லைனா பேச்சையே நிறுத்திடுவாங்க. எதையும் மறைக்காம நேரா முகத்துக்கு நேரா பேசிடுவாங்க.
34
ரொம்ப உழைப்பாளிகளாக இருப்பாங்க
எந்த மாதத்திலும் 8, 17, 26 தேதிகள்ல பிறந்தவங்களோட எண் இது. இவங்களுக்கு அதிபதி சனி. சனியோட ஆதிக்கத்தால, இவங்க ரொம்ப உழைப்பாளிகளாகவும், சீரியஸான ஆளாவும் இருப்பாங்க. கூட்டமா இருக்குறது இவங்களுக்கு பெருசா பிடிக்காது. பொறுமை இவங்களுக்கு அதிகம். ஆனா, ஒரு தடவை யாராவது இவங்களை ரொம்ப காயப்படுத்திட்டா, அந்த நபரை முழுக்க மறக்க மாட்டாங்க. இவங்க பார்வையில ஒருத்தர் கெட்டவராயிட்டா, திரும்பவும் அவங்க மனசுல இடம் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.