ஏப்ரல் மாதம் நடக்கப்போகும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? முழு விவரம் இதோ.!

Published : Mar 18, 2026, 10:53 AM IST

April 2026 Rasi Palan : ஏப்ரல் மாதத்தில் புதன், செவ்வாய் சூரியன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
114
April 2026 Rasi Palan

2026 ஆம் ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். இந்த மாதம் பல கிரக பெயர்ச்சிகள், சேர்க்கைகள், நட்சத்திர மாற்றங்கள் நிகழ இருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் செவ்வாய் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சூரியன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் இணைந்து மங்களாதித்ய யோகம், திரிகிரக யோகம் உள்ளிட்ட யோகங்கள் உருவாக இருக்கிறது.

214
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகள்

அதேபோல் சுக்கிர பகவான் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைகிறார். மாத இறுதியில் ரிஷப ராசிக்குள் பெயர் பிரவேசிக்கிறார். புதன் பகவான் ஏப்ரல் 11 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்குகிறார். 

ஏப்ரல் 14 சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்து சுக்கிரனுடன் இணைந்து சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறார். ஏப்ரல் 17ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கிறார். ஏப்ரல் 30 புதன் பகவான் மேஷ ராசிக்குள் நுழைய இருக்கிறார்.

314
மேஷம்

ஏப்ரல் மாதம் மேஷ ராசியினருக்கு தொழில் ரீதியாக முன்னேற்றம் காணப்படும். நிலுவையில் இருந்த சொத்து தொடர்பான சிக்கல்கள் தீரும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

414
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு ராகுவின் சாதகமான நிலையால் வருமானம் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

514
மிதுனம்

ஏப்ரல் மாதம் மிதுன ராசிக்கு பொற்காலமாக அமையக்கூடும். வேலையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் கை கூடும்.

614
கடகம்

பாக்கிய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பதால் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். தந்தை வழி உறவில் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

714
சிம்மம்

ஏப்ரல் மாதம் முழுவதும் சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அதேசமயம் குருவின் பார்வையால் நிதி நெருக்கடிகள் குறையும்.

814
கன்னி

ஏப்ரல் மாதம் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு அற்புமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு முழுமையாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மற்றும் அந்தஸ்து உயரும்.

914
துலாம்

எதிரிகளை வீழ்த்தும் தைரியம் பிறக்கும். கடன் சுமைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

1014
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இது யோகமான மாதமாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

1114
தனுசு

அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் இருந்தாலும், குருவின் பலத்தால் தாயாரின் உடல்நிலை சீராகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டு.

1214
மகரம்

தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

1314
கும்பம்

ஜென்ம சனியின் பிடி தளரத் தொடங்கும். பண வரவு சீராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. குடும்ப ஒற்றுமை பலப்படும். இழுபறியில் இருந்து வந்த வேலைகள் சுமுகமாக முடிவடையும்.

1414
மீனம்

மீன ராசியில் சனி சஞ்சரிப்பதால் ஏழரை சனியின் தாக்கம் இருக்கும். எந்தவொரு முடிவையும் நிதானமாக எடுக்கவும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் தள்ளிப்போனாலும் நிச்சயமாகக் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories