
கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்களும் ஏற்படலாம். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்ற உள்ளன. இதனால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெற இருப்பதாக ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. எந்த கிரகங்கள் எந்த ராசிகளுக்கு பெயர்ச்சி அடைகின்றன? அதனால் பலனடையக் கூடிய ராசிகள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 17 அன்று சூரியன் கடக ராசியிலிருந்து விலகி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு மாறுகிறார். சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பொழுது அந்த ராசிக்கு கூடுதல் பலத்தையும், அதிகாரத்தையும், நம்பிக்கையும் அளிக்க இருக்கிறார். ஆகஸ்ட் 21 அன்று சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் செல்வம், மகிழ்ச்சி, காதல் ஆகியவற்றை குறிக்கும் கிரகம் என்பதால் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு பணவரவையும், உறவில் இணக்கத்தையும் கொடுக்க இருக்கிறது. ஆகஸ்ட் 30 அன்று புதன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் விவேகம், தகவல் தொடர்பு, வியாபாரம் ஆகியவற்றை குறித்தும் கிரகமாகும். எனவே இந்த மாற்றமும் சில ராசிகளுக்கு முன்னேற்றத்தை கொண்டு வரவுள்ளது.
ஜோதிடத்தின் படி இந்த மூன்று கிரக பெயர்ச்சிகள் காரணமாக 5 ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தை பெற வாய்ப்புள்ளது. அதில் முதலாவதாக மேஷ ராசியினர் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் மேஷ ராசிகளுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். தொழிலில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெறும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தந்தையுடன் உறவு வலுப்படும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை மாற்றத்தால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். பல வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். இதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை ஆகிய இரண்டும் சிறப்பாக இருக்கும். தொட்டதெல்லாம் வெற்றி பெறும் காலமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு.
சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்திற்கு வர இருப்பதால் ஆகஸ்ட் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது. இந்த மாதத்தில் புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். உங்களில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். நிதி ரீதியாக இந்த மாதம் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும். தடைபட்ட சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். கடன் பிரச்சினைகள் கணிசமாக குறையும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பல நன்மைகளை தர உள்ளது. இந்த கிரக பெயர்ச்சிகள் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். கலை மற்றும் கலாச்சாரத் துறைகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடனான உறவுகள் மேம்படும். குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இடையே இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சி அதிகரிக்கும் குடும்பத்துடன் தரமான நேரத்தையும் செலவிடுவீர்கள். ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியமும் மேம்படும். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன்களை அளிக்க இருக்கிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்துடன் படித்தால் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம்.
இந்த மூன்று கிரகங்களின் பெயர்ச்சியானது கடக ராசிக்கு சாதகமான சூழலை உருவாக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக வலுப்படுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என இரண்டிலும் அற்புதமான மாற்றங்கள் நிகழவுள்ளது. அதேபோல் தனுசு ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களின் தன்னம்பிக்கை உயரும். இந்த காலகட்டத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் கைகூடும். வருமானங்கள் அதிகரிப்பதால் லாபம் அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடு இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். இதன் காரணமாக செல்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட கால இலட்சியங்கள் நிறைவேறும் காலம் கை கூடி உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ராசிபலன்கள் பொதுவானவை. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம், தசா புத்தி போன்ற காரணங்களைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படலாம். இவை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையிலானவை மட்டுமே இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)