அங்காரக யோகம் பிப்ரவரி 2026 துவங்கி அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால் இந்த காலகட்டத்தில் கோபத்தை அடக்க வேண்டும். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். ஆயுதங்கள், நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றை கையாளும் பொழுது அதிக எச்சரிக்கை தேவை.
சாலைகளில் நடந்து செல்லும் பொழுது அல்லது வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப உறவுகள் மற்றும் மற்றவரிடம் பேசும் பொழுது நிதானமாக பேச வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியாகவும், விட்டுக் கொடுத்துப் போவதும் அவசியம்.
பரிகாரங்கள்
செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானை வழிபாடு செய்வது அங்காரக யோகத்தின் உக்கிரத்தை குறைக்க உதவும். செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம்.
ராகுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த துர்க்கை அம்மனை வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு உணவு தானம், ஆடை தானம் செய்வது அங்காரக யோகத்தின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)