துலாம் ராசி நேயர்களே, பல நாட்களாக தடைபட்டு நின்ற வேலைகள் இன்று மீண்டும் வேகம் எடுக்கும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
முயற்சிகளில் நேர்மையாகவும், நிதானமாகவும் செயல்படுவது வெற்றியைத் தரும். உங்கள் தன்னம்பிக்கை உயரும். சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
நிதி நிலைமை:
தொழில் அல்லது வேலையில் நீங்கள் செய்யும் வேலைகளுக்காக பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் பண ஆதாயமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட கால நிதி ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும். முதலீடுகளில் கவனம் செலுத்துவது நல்லது. வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் அல்லது அலங்காரப் பொருட்களுக்காக செலவு செய்ய நேரிடலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவுகளில் இன்று நல்லிணக்கம் ஏற்படும் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாகும் உறவில் இருந்த சிக்கல்கள் தேர்ந்து நல்லிணக்கம் ஏற்படும் உங்கள் அணுகு முறையில் மென்மையும் இணக்கமும் காணப்படும் இது குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த நேரிடலாம்
பரிகாரங்கள்:
இன்று விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. துளசி மாலை சாற்றி கற்கண்டு படைத்து வழிபடுங்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கற்கண்டு பிரசாதமாக வழங்குங்கள். இயலாதவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நன்மைகளை அளிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.